மும்பை: கிரிக்கெட் வீரர் சர்ஃபராஸ் கானின் வேற லெவல் டெடிகேஷன் என்று அனைவரும் பாராட்டுகின்றனர். எதற்காக தெரியுமா?
கிரிக்கெட் வீரர் சர்ஃபராஸ் கானின் புதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொழுகொழுவென இருந்தவர், இப்போது 10 கிலோ வரை எடையை குறைத்து ஆளே அடையாளம் தெரியாதவாறு மாறிவிட்டார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பயிற்சியில் ஈடுபட்டு வரும், ஃபிட்னஸிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இங்கிலாந்து தொடருக்கான 18 வீரர்கள் அடங்கிய இந்தியா A அணியில் அவர் இடம்பெற்றுள்ளார்.
உடல் எடை குறைப்பு தீவிரம் தாண்டி தற்போது அடையாளம் தெரியாத அளவிற்கு ஆளே மாறி உள்ளதை பார்த்து கிரிக்கெட் ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.