லண்டனில் நடைபெற்று வரும் 2025 விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில், 3வது சுற்றுப் போட்டிகள் அதிர்ச்சிகள் மற்றும் ஆட்ட களிழ்ச்சியுடன் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பெண்கள் ஒற்றையர் பிரிவில், முன்னாள் உலக நம்பர் ஒன் வீராங்கனை ஜப்பானின் நவோமி ஒசாகா, ரஷ்யாவின் அனஸ்டாசியா பவுலிசென்கோவாவிடம் தோல்வியடைந்து வெளியேறினார். 6-3 என முதல் செட்டை வென்ற ஒசாகா, அடுத்த இரு செட்களில் 4-6, 4-6 என தோற்றார்.

அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா, ஹங்கேரியின் டால்மா கால்பியை 6-3, 5-7, 6-3 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்க வீராங்கனை கேட்டி மெக்னலியை 5-7, 6-2, 6-1 என வீழ்த்தி அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றார். கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, கிரீசின் மரியா சக்காரியை 6-3, 6-1 என எளிதாக வீழ்த்தினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில், அமெரிக்காவின் பென் ஷெல்டன், ஆஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜிகட்டாவை 6-2, 7-5, 6-4 என்ற நேரடி செட்களில் வீழ்த்தினார். அதேபோல், பிரான்சின் மோன்பில்ஸ், ஹங்கேரியின் மார்டன் புக்சோவிக்சிடம் 4-6, 6-1, 6-4, 6-7, 4-6 என்ற கடினமான போட்டியில் தோல்வியடைந்தார்.
இத்தாலியின் ஜானிக் சின்னர், ஆஸ்திரேலியாவின் அலெக்சாண்டர் வுகிகை 6-1, 6-1, 6-3 என ஒருபோதும் வாய்ப்பு அளிக்காமல் வீழ்த்தினார். குரோஷியாவின் மரின் சிலிக், பிரிட்டனின் ஜாக் டிராப்பரை 6-4, 6-3, 1-6, 6-4 என தோற்கடித்து அடுத்த கட்டத்துக்கு முன்னேறினார். 2025 விம்பிள்டன் தொடரில் தற்போது வரை பல முன்னணி வீரர்கள் அசத்தி வருகின்றனர், சிலர் எதிர்பாராத முறையில் வெளியேறியுள்ளனர்.