கேரளா: கேரளாவில் கொரோனா தொற்று அறிகுறியுடன் 68 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது.
கொரோனா தொற்று கடந்த 2020-ம் ஆண்டு நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் நமது நாட்டில் கேரள மாநிலத்தில் தான் முதன்முதலாக கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பல மாநிலங்களில் கொரோனா தொற்று பரவியது.
இந்தநிலையில் தற்போது சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று பரவி வருகிறது. இதையடுத்து அனைத்து நாடுகளிலும் அச்சம் ஏற்பட்டுள்ளது. நமழ நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் சுகாதாரத்துறையினர் உஷார் நிலையில் உள்ளனர்.
இருந்தபோதிலும் சில மாநிலங்களில் கொரோனா தொற்று அறிகுறியுடன் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்தில் 95 பேருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவர்களில் 27 பேர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். மற்ற 68 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்களின் எண்ணிக்கையில் மராட்டிய மாநிலத்தை விட கேரளா மாநிலம் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.