சென்னை: நமது உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் பழங்கள், மற்றும் காய்கறிகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அவற்றை உங்களது அன்றாட உணவுகளுடன் சேர்த்து கொள்ளவும்.
வாழைப்பழம்: உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவும் பழ வகைகளில் ‘வாழைப்பழம்’ முக்கிய இடத்தை பிடிக்கிறது. இதன் pH மதிப்பு 45 மற்றும் 4.7 ஆக இருந்தாலும் உடலுக்கு ஆக்ஸிஜன் வழங்குவதில் முக்கிய பங்காற்றுகிறது.
எலுமிச்சை: வைட்டமின் சி நிரம்பி காணப்படும் எலுமிச்சை உடலுக்கு ஆற்றலைத் தந்து நோய்கள் வராமல் பாதுகாப்பது போலவே, உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது.
திராட்சை: திராட்சைப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது உடலில் இருக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களையும் குறைக்கிறது மற்றும் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கிறது.
பப்பாளி: பப்பாளியில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. எனவே தான் இவற்றை சாப்பிட மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் பப்பாளியின் pH மதிப்பு 8.5க்கு மேல் உள்ளது. மேலும், இது இரத்த அணுக்களில் ஆக்ஸிஜனை அதிகரிப்பதன் மூலமாக நோயாளியை மீண்டும் ஆரோக்கியமாக்குகிறது.