சென்னை: பழங்களின் அரசி என்று அழைக்கப்படும் முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை தெரிந்து கொள்ளுவோம்!
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. அதிலும் அதிலும் பச்சை மாங்காய் சளி மற்றும் இருமலுக்கு பெரிதும் சிறப்பான தீர்வைத் தரும்.
புற்றுநோயை குணப்படுத்தும்: மாம்பழத்தில் அதிகப்படியான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் எதிர்த்துப் போராடுவதிலும், சரும சுருக்கத்தைப் போக்குவதிலும் மிகவும் சிறந்ததாக விளங்குகிறது.
பாலுணர்வு: பொதுவாக வைட்டமின் ஈ காதல் வாழ்க்கையை சிறப்பாக வைப்பதற்கு பெரிதும் உதவும். இத்தகைய வைட்டமின் ஈ, மாம்பழத்தில் அதிகம் அடங்கியுள்ளது. எனவே இதனை அதிகம் சாப்பிடுவது, ஒரு நல்ல ரொமான்ஸிற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
கண் பார்வை தெளிவு பெறும்: மாம்பழத்தில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. தெளிவாக மற்றும் ஆரோக்கியமான கண் பார்வைக்கு வைட்டமின் ஏ மிகவும் அவசியம். இத்தகைய சத்து மாம்பழத்தில் இருப்பதால், இதனை அதிகம் சாப்பிட்டால், தெளிவான கண் பார்வையைப் பெறலாம்.