சென்னை: வாக்களித்த மக்களுக்கு நன்றி… சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களித்த 1.5 கோடி மக்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘என்னைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டு மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை வலிமையானதாகவே கருதுகிறேன். நாம் பார்க்காத வெற்றியும் இல்லை.
நாம் சந்திக்காத தோல்வியும் இல்லை. உங்களால் கிடைத்த வலிமை இருக்கும் வரை எனக்கு ஏன் கவலை’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.