பெங்களூரு: கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கை உறுதிப்படுத்தவும், ரவுடிகளை ஒடுக்கவும் போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் டி.கே.சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம் பேசுகையில், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க போலீஸ் அதிகாரிகளுக்கு தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் நடைபெற உள்ள நிலையில், அனைத்து வாக்காளர்களின் வாக்குரிமையையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ரவுடிகளை ஒடுக்க தாலுகா அளவில் தனிப்படைகள் அமைக்கப்பட வேண்டும் என்றும், பழைய மற்றும் புதிய ரவுடிகளை போலீசார் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.