தேனி அருகே வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்ற குடும்பத்தின் வீட்டில் மர்ம கும்பல் கொள்ளையடித்துள்ளது. 91 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கம் திருடப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து நடந்த கொள்ளை சம்பவங்கள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.