By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரானின் சட்டவிரோத எண்ணெய் வர்த்தகம்: புதிய பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா!
    1 Min Read
    சீனாவில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
    0 Min Read
    டிரம்ப் போல தோற்றமளித்ததால் தப்பிய எருமை மாடு
    1 Min Read
    பாடகி கெனிஷாவுக்கு துபாய் நீதிமன்றம் ரூ. 1.30 லட்சம் அபராதம் விதிப்பு
    1 Min Read
    இலங்கையில் ரூ.60 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்: 3 சீனர்கள் கைது
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    வாடிக்கையாளர்களே தேர்வு செய்யும் எத்தனால் கலப்பு பெட்ரோல் திட்டம்
    1 Min Read
    ட்விஷா சர்மா மரணம்: மாமியாரை கைது செய்த சிபிஐ
    1 Min Read
    ஹேப்பி லேண்ட் பூங்காவில் ராட்டினம் முறிந்து விபத்து: 5 பேர் படுகாயம்
    1 Min Read
    நீட் மறுதேர்வை நேரடியாக கண்காணிக்கும் பிரதமர் அலுவலகம்!
    1 Min Read
    டெல்லியில் பலத்த மழை: 521 விமான சேவைகள் பாதிப்பு!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    வாழ்க்கை சுமூகமாக நகர பெண்கள் எடுக்கும் முடிவுகள்
    1 Min Read
    35 வயதிற்கு மேல் கருத்தரிப்பதற்கு பின்பற்ற வேண்டிய சில நடைமுறைகள்
    1 Min Read
    குழந்தைகள் வளரும்போது அவர்களை நல்வழிப்படுத்தும் வழிமுறைகள்
    1 Min Read
    உங்கள் கணவருடன் விவாதம் செய்யும் போது சண்டை வராமல் தடுப்பது எப்படி?
    1 Min Read
    கணவன்மார்களே மனைவியை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: எடப்பாடி பொய் சொல்கிறார்… இந்திய கம்யூ., மாநில செயலாளர் கண்டனம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > எடப்பாடி பொய் சொல்கிறார்… இந்திய கம்யூ., மாநில செயலாளர் கண்டனம்
அரசியல் செய்திகள்

எடப்பாடி பொய் சொல்கிறார்… இந்திய கம்யூ., மாநில செயலாளர் கண்டனம்

Nagaraj
Last updated: February 28, 2026 6:22 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: எடப்பாடி பழனிசாமி தகவல் உண்மைக்கு புறம்பானது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ” எடப்பாடி கே.பழனிசாமி தகவல் உண்மைக்கு புறம்பானது… இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், தமிழக மக்களின் பேரன்புக்கும் போற்றுதலுக்கும் உரிய மூத்த அரசியல் தலைவர் தோழர் இரா.நல்லகண்ணு 25.02.2026 ஆம் தேதி பிற்பகலில் வயது மூப்பு காரணமாக காலமானார்.

எதிர்கட்சித் தலைவர் அவரது மறைவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்த தவறியதன் மீது பொது மக்கள் மத்தியில் வினாவும் விமர்சனங்களும் எழுந்துள்ளன. இதற்கு எதிர்கட்சித் தலைவர் “எனது தாயார் 2020- ல் காலமான போது கம்யூனிஸ்டு கட்சியினர் யாருமே வரவில்லை. இப்போது நான் ஏன் போகணும்” எனச் சொல்லியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மூத்த அரசியல் தலைவரின் மறைவுக்கு அஇஅதிமுக பொதுச் செயலாளர், எதிர்கட்சித் தலைவர் நேரில் வருவதும் மறுப்பதும் அவர்களது விருப்பம். தவிர்க்க முடியாத சூழல் காரணமாக வர இயலாமல் போவது இயல்பானது. ஆனால், எதிர்கட்சித் தலைவர் உண்மை பேச வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

எடப்பாடி கே.பழனிசாமியின் தாயார் காலமான போது, அவரது மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி தெர்விக்க வேண்டும் என்ற கட்சியின் முடிவுப்படி இப்போதைய மாநிலத் துணைச் செயலாளர் நா.பெரியசாமி, பொருளாளர் தோழர் எம்.ஆறுமுகம் (முன்னாள் எம்எல்ஏ) இருவரும், அவரது கிராமத்து வீட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி தெரிவித்து, எடப்பாடியாரிடம் துக்கம் விசாரித்ததை ஏன் மறுத்தும், மறைத்தும் பேச வேண்டும்?

துக்க வீட்டில் அப்போதைய மதுவிலக்கு துறை அமைச்சர் பி.தங்கமணி, எம்.ஆறுமுகம், நா.பெரியசாமி ஆகியோரை அறிமுகம் செய்த போது “ஆறுமுகத்தை எனக்கு நல்லாத் தெரியும்” என கூறியது மறந்து போனதா? இந்த நிகழ்வின் போது வெளியூர் நிகழ்ச்சியில் இருந்த, கட்சியின் அப்போதைய மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஏழுமலை இருவரும் “முதலமைச்சர்” எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை, சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அவரது அரசு இல்லத்திற்கு நேரில் சென்று துக்கம் விசாரித்து, அவரது தாயாரின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி வந்தது அனைவரும் அறிந்த செய்தியாகும்.

எது எப்படியோ, அஇஅதிமுக நிறுவப்பட்ட காலத்தில் எம்ஜிஆர் அவர்களுக்கு பக்கபலமாக இருந்து உதவிய, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியும், அதன் தலைவர்கள் எம். கல்யாண சுந்தரம், கே.பாலதண்டாயுதம், ப.மாணிக்கம் போன்ற தலைவர்களுடன் இணைந்து நின்றுவர் தோழர் இரா.நல்லகண்ணு என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது என்பதை மறந்து விடாதீர்கள். உண்மை பேசுங்கள். எதிர்கட்சித் தலைவரே, உண்மையை மட்டும் பேசுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You Might Also Like

நதிநீர் இணைப்பு காலத்தின் கட்டாயம்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

வைகோ விளக்கம்: அதிமுக எம்எல்ஏக்கள் தவெக இணைப்பில் ‘குதிரை பேரம்’ குற்றச்சாட்டை ஏற்கவில்லை

ஊழலற்ற தூய்மையான ஆட்சிதான் முதல்வரின் நோக்கம்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

‘ஜனநாயகன்’ சமூக கொண்டாட்டமாக வரும் – அமைச்சர் ராஜ்மோகன்

காசாவில் ராணுவ கட்டுப்பாட்டை விரிவுப்படுத்தும் இஸ்ரேல்

TAGGED:Edappadi PalaniswamiIndian Commun.Speak the TruthStatementVeerapandianஅறிக்கைஇந்திய கம்யூ.உண்மையை பேசுங்கள்எடப்பாடி பழனிசாமிவீரபாண்டியன்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்

நதிநீர் இணைப்பு காலத்தின் கட்டாயம்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?