சென்னை: ரூ.8000 கூப்பன் மாதிரி வழங்க திமுகவினருக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. மேலும் ரூ.8000 கூப்பன் வழங்கியவர்கள் மீது வழக்கும் பதிவு செய்துள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
திமுகவின் தேர்தல் வாக்குறுதியான ரூ.8000 கூப்பன் மாதிரியை வாக்காளர்களுக்கு வழங்க தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. ரூ.8000 கூப்பன் மாதிரி வழங்க தேர்தல் ஆணையத்திடம் யாரும் அனுமதி பெறவில்லை.
தமிழகத்தில் சில மாவட்டங்களில் ரூ.8000 கூப்பன் வழங்கியது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் திமுகவினர் ரூ.8000 மாதிரி கூப்பன் வழங்கி வந்த நிலையில் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.