கரூர்: கரூரில் இந்தியில் இருந்த கடை விளம்பரத்தை கருப்பு பெயின்ட்டால் வி.சி.க.வினர் அடித்து அழித்தனர்.
கரூர் பேருந்து நிலையம் அருகே செல்போன் விற்பனை கடை விளம்பரப் பலகையில் இந்தியில் எழுத்துக்கள் இருந்தன.
இதையடுத்து கருப்பு பெயின்ட்டால் இந்த இந்தி எழுத்துக்களை அடித்து தமிழ் வாழ்க என விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் எழுதியுள்ளனர்.
சென்னை மொபைல்ஸ் என்ற கடையில் தீபாவளி சலுகை குறித்து இந்தியில் இருந்த விளம்பர ஸ்ட்டிக்கரை அகற்றும்படி ஏற்கனவே அக்கடை உரிமையாளரை செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தாக கூறப்படுகிறது.