சென்னை: த.வெ.க. தொண்டர்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள். வாருங்கள் புதிய அரசை நடத்திக்காட்டுவோம் என்று முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் விஜய் தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் பேசியதாவது:
இது புதிய தொடக்கம், சமூக நீதிக்கான புதிய அத்தியாயம் தொடங்கியது. * எனக்கு கொஞ்சம் நேரம் கொடுங்கள், அனைத்தையும் சரி செய்வேன், அதற்கு கொஞ்சம் அவகாசம் தேவை. 100 சதவீதம் நீங்கள் என்னை நம்பலாம்.
எங்கள் அரசாங்கத்தில் இணை, துணை என யாரும் இல்லை ஒரே பவர் சென்டர் நான் மட்டு தான். நாம பதவிக்கு வந்துவிட்டோம், எது வேண்டுமானாலும் செய்யலாம் என நினைத்திருந்தால் இப்போதே அவர்கள் மனதில் இருந்து அதனை அழித்து விடலாம்.
இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என அனைவரின் முகம் தான் இந்த விஜய்யின் முகம். முகத்தை மூடிக்கொண்டு யாரையும் சந்திக்க மாட்டேன். என் வலி, வேதனைகளை தொண்டர்களும் அனுபவித்தனர். மக்கள் பணத்தை தொடமாட்டேன். த.வெ.க. தொண்டர்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள். வாருங்கள் புதிய அரசை நடத்திக்காட்டுவோம்.
நல்லது நடக்கும், நம்பிக்கையாக இருங்கள், மீண்டும் சந்திப்போம்… இல்லை இனி மீண்டும் மீண்டும் சந்திப்போம் என்றார்.