By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ புதிய டிரெய்லர் வெளியீடு
    1 Min Read
    ஜி7 மாநாட்டில் உலகத் தலைவர்களுடன் மோடி
    1 Min Read
    ஜி7 மாநாட்டில் மோடி – டிரம்ப் சந்திப்பு
    1 Min Read
    அமெரிக்க ராணுவ விமானம் விபத்து: 8 பேர் பலி
    1 Min Read
    சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஒருவர் பலி, 4 பேர் காயம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஹார்முஸ் பதற்றத்திலும் பாதுகாப்பாக சென்ற ‘திஷா’: இந்திய கப்பல்களுக்கு புதிய நம்பிக்கை!
    1 Min Read
    குஜராத்தில் அதிரடி சோதனை: 84 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!
    1 Min Read
    டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: 7 பேர் கைது!
    1 Min Read
    யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியீடு: மெயின் தேர்வுக்கு 13,343 பேர் தகுதி!
    1 Min Read
    கொல்கத்தாவில் யோகா தின விழா! பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்ட ஏற்பாடு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    முகத்தில் அதிகமாக எண்ணெய் வடிய இதுவும் ஒரு முக்கிய காரணம்!
    3 Min Read
    எண்ணெய்ப்பசை சருமத்தால் கவலைப்படுகிறீர்களா? இதோ இருக்கு எளியமுறையில் தீர்வு
    1 Min Read
    வியர்வை நாற்றத்தை தடுக்க என்ன செய்யலாம்??
    1 Min Read
    உடற்பயிற்சியின் மற்றொரு வடிவமாக திகழும் ஏரோபிக்ஸ் நடனம்
    1 Min Read
    இரவில் நன்றாக தூங்க வேண்டுமா… உணவுகளை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: தேசிய ஜனநாயக கூட்டணி தஞ்சை வேட்பாளருக்கு லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ்) ஆதரவு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > தேசிய ஜனநாயக கூட்டணி தஞ்சை வேட்பாளருக்கு லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ்) ஆதரவு
அரசியல் செய்திகள்

தேசிய ஜனநாயக கூட்டணி தஞ்சை வேட்பாளருக்கு லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ்) ஆதரவு

Nagaraj
Last updated: April 17, 2026 9:02 am
By Nagaraj 2 Min Read
Share
SHARE

தஞ்சாவூர்: தேசிய ஜனநாயக கூட்டணியில் தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தத்தை சந்தித்து லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ்) ஜேஎம்எஸ் மாநில செயலாளர் பி.கருணாகரன் மற்றும் நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்தனர்.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) முக்கிய சக்தியாக உள்ளது. அதிமுக, பாஜக, பாமக (அன்புமணி ராமதாஸ் பிரிவு), அமமுக (டிடிவி தினகரன்) உள்ளிட்ட கட்சிகள் இணைந்து கூட்டணியாகச் செயல்படுகின்றன. இந்த கூட்டணி சார்பில் தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக கருப்பு முருகானந்தம் களம் இறங்கி உள்ளார்.

தஞ்சை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வேட்பாளர் கருப்பு முருகானந்தம் மத்திய அரசு செய்துள்ள சாதனைகளை விளக்கி கூறி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ்) ஜேஎம்எஸ் மாநில செயலாளர் பி.கருணாகரன் மற்றும் மாவட்ட தலைவர் நாஞ்சி.விஜய், செயலாளர் சுவாமி மேனன் ஆகியோர் வேட்பாளர் கருப்பு முருகானந்தத்தை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் இதுகுறித்து லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ்) ஜேஎம்எஸ் மாநில செயலாளர் பி.கருணாகரன் கூறுகையில், மத்திய அரசு ஏராளமான நலத்திட்டங்களை தமிழகத்திற்கு செய்து வருகிறது. கடந்த பத்தாண்டுகளில், தமிழகத்தில் ஜன் தன் திட்டத்தில் 1.7 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தில் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன. தூய்மை பாரத திட்டத்தில் 59 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமப்புற வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. ஜல் ஜீவன் இயக்க திட்டத்தில் 89 லட்சம் கிராமப்புற வீடுகளுக்கு குழாய் வழி குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. பிரதமரின் உஜ்வாலா திட்டத்தில் 41 லட்சத்திற்கும் மேற்பட்ட சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஆண்டுக்கு ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் என்ற விகிதத்தில் 79 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு சுகாதார காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. 4,100 கி.மீ.க்கும் அதிகமான தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 2014 முதல் 1,303 கி.மீ.க்கும் அதிகமான புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சுமார் 2,242 கி.மீ. ரயில் வலையமைப்பு மின்மயமாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 94% ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. 54 கி.மீ.க்கும் அதிகமான தொலைவுக்கு சென்னை மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகின்றன.

உதான் திட்டத்தின் கீழ், சேலம் விமான நிலையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது, அதே நேரத்தில் நெய்வேலி மற்றும் வேலூரில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. கூடுதலாக, பிரதமர் மோடி தலைமையிலான அரசு, மாநிலங்களுக்கு மூலதன செலவினத்திற்கான சிறப்பு உதவித் திட்டத்தின் மூலம் மூலதனச் செலவில் மாநில அரசுகளின் முதலீட்டை ஆதரித்துள்ளது. இதில் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு 50 ஆண்டு வட்டி இல்லாத கடன்கள் வழங்கப்படுகின்றன. இந்த நிதியுதவி, நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் இல்லாமலேயே வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு தமிழகத்திற்கு ஏராளமான திட்டங்களை மத்திய அரசு செய்துள்ளது. இவ்வாறு சிறப்பாக தமிழகத்திற்கு நலத்திட்டங்களை செய்துள்ள மத்திய அரசின் என்டிஏ கூட்டணி தஞ்சை தொகுதி வேட்பாளர் கருப்பு முருகானந்தத்திற்கு ஆதரவு தெரிவித்து அவரது வெற்றிக்கு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

You Might Also Like

தஞ்சைக்கு மஞ்சள் அலர்ட்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!

27 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; வானிலை ஆய்வு மையம் தகவல்

இருமுறை தேசிய கீதம் பாடப்பட்டதில் தவறு ஒன்றும் கிடையாது… பிரேமலதா ஆதரவு

சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்; அமைச்சர் ராஜ்மோகன் உறுதி

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் த.வெ.க. போட்டியிட்டால் ஆதரவு: வைத்திலிங்கம் அறிவிப்பு!

TAGGED:BJP candidategreetingsJMS State SecretaryLok Janshakti Party (Ram Vilas)supportThanjavurஆதரவுதஞ்சாவூர்பாஜக வேட்பாளர்லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ்)வாழ்த்துஜேஎம்எஸ் மாநில செயலாளர்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சிறிய செய்தி

டாஸ் வென்ற ஜிம்பாப்வே

By Nagaraj 0 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?