சென்னை: அமைச்சர்கள் எம்.எல்.ஏக்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் தான் இனி சிகிச்சை எடுத்துக் கொள்வார்கள் என்று சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அருண்ராஜ் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான பணியிடமாற்ற கவுன்சிலிங் விரைவில் நடைபெற இருக்கிறது.
முழுவதுமாக வெளிப்படைத்தன்மையுடன் நேர்மையான முறையில் கவுன்சிலிங் நடத்தப்படும் என்றார். மேலும் அவர் கூறுகையில், அமைச்சர்கள் எம்.எல்.ஏக்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் தான் இனி சிகிச்சை எடுத்துக் கொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.