காரைக்குடி: காரைக்குடி தொகுதியில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தோல்வி அடைந்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 84 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 23 தொகுதிகளில் முன்னிலை வகித்தும் வருகிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டார். தேர்தலில் சீமான் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் காரைக்குடி தொகுதியில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 30793 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியை தழுவியுள்ளார்.
தவெக சார்பில் அத்தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் டி.கெ. பிரபு சுமார் 101358 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாங்குடி 55284 வாக்குகள் பெற்றுள்ளார்.