By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    உக்ரைன் தாக்குதல்கள் எதிரொலி: விமான எரிபொருள் ஏற்றுமதிக்கு தடை விதித்த ரஷ்யா
    1 Min Read
    இஸ்ரேல்-லெபனான் பதற்றம்: அமெரிக்காவுடனான உயர்மட்ட பேச்சுவார்த்தையை தற்காலிகமாக நிறுத்திய ஈரான்
    1 Min Read
    ஈரானின் சட்டவிரோத எண்ணெய் வர்த்தகம்: புதிய பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா!
    1 Min Read
    சீனாவில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
    0 Min Read
    டிரம்ப் போல தோற்றமளித்ததால் தப்பிய எருமை மாடு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    மேலும் 114 ரஃபேல் விமானங்கள்: இந்தியாவின் விமானப்படை பலம் அதிகரிப்பு
    1 Min Read
    மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.94 லட்சம் கோடியை கடந்தது
    1 Min Read
    கவர்னருக்காக அரை மணி நேரம் போக்குவரத்து நிறுத்தம்: சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய வாகன ஓட்டி
    1 Min Read
    வாடிக்கையாளர்களே தேர்வு செய்யும் எத்தனால் கலப்பு பெட்ரோல் திட்டம்
    1 Min Read
    ட்விஷா சர்மா மரணம்: மாமியாரை கைது செய்த சிபிஐ
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    பொறியியல் சேர்க்கை விண்ணப்ப அவகாசம் ஜூன் 5 வரை நீட்டிப்பு
    1 Min Read
    வாழ்க்கை சுமூகமாக நகர பெண்கள் எடுக்கும் முடிவுகள்
    1 Min Read
    35 வயதிற்கு மேல் கருத்தரிப்பதற்கு பின்பற்ற வேண்டிய சில நடைமுறைகள்
    1 Min Read
    குழந்தைகள் வளரும்போது அவர்களை நல்வழிப்படுத்தும் வழிமுறைகள்
    1 Min Read
    உங்கள் கணவருடன் விவாதம் செய்யும் போது சண்டை வராமல் தடுப்பது எப்படி?
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: மக்களின் அமோக பாராட்டு… செல்லுமிடமெல்லாம் வரவேற்பு: திமுக வேட்பாளர் சண்.ராமநாதனுக்கு குவியும் ஆதரவு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > மக்களின் அமோக பாராட்டு… செல்லுமிடமெல்லாம் வரவேற்பு: திமுக வேட்பாளர் சண்.ராமநாதனுக்கு குவியும் ஆதரவு
அரசியல் செய்திகள்

மக்களின் அமோக பாராட்டு… செல்லுமிடமெல்லாம் வரவேற்பு: திமுக வேட்பாளர் சண்.ராமநாதனுக்கு குவியும் ஆதரவு

Nagaraj
Last updated: April 17, 2026 5:00 pm
By Nagaraj 3 Min Read
Share
SHARE

தஞ்சாவூர்: தஞ்சை சட்டமன்ற தொகுதி முழுவதும் மக்களை நேரில் சந்தித்து கோரிக்கைகளை கேட்டு அறிந்து நிறைவேற்ற பாடுபடுவேன். மக்கள் சொல்வது செயலில் மலரும் என்று தஞ்சாவூர் திமுக சட்டமன்ற வேட்பாளர் சண்.ராமநாதன் தெரிவித்தார்.

தஞ்சாவூர் சட்டமன்ற திமுக வேட்பாளர் சண்.ராமநாதன் தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டார். டீக்கடை, ஹோட்டல் ஆகியவற்றில் தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். பின்னர் மாநகராட்சி 38,39,40 ,41 வார்டுகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அண்ணா நகர், பர்மா காலனி, விளார் ரோடு பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார். வேட்பாளருடன் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், மாவட்டத் துணைச் செயலாளர் கனகவல்லி பாலாஜி, டாக்டர் ஸ்ரீராம் சுப்பையா, மண்டல குழு தலைவர் ரம்யா சரவணன், மாமன்ற உறுப்பினர் உஷா மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த ஏராளமானோர் உதயசூரியனுக்கு வாக்களிக்கும்படி கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டனர். சென்ற இடங்களில் வேட்பாளருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பல தெருக்களில் மாடியில் இருந்து பூக்கள் தூவி வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது வேட்பாளர் சண் ராமநாதன் பேசும்போது, தஞ்சை சட்டமன்றத் தொகுதிக்கு எப்போதும் ஒரு தனி சிறப்பு உண்டு. தலைவர் கலைஞர் 1962ம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்டு வென்ற தொகுதி தஞ்சாவூர். அது முதல் திமுக வின் கோட்டையாக தஞ்சாவூர் திகழ்கிறது. இந்தியாவிலேயே நம்பர் 1 வளர்ச்சியடைந்த மாநிலமாக தமிழ்நாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் மாற்றி காட்டி உள்ளார். தமிழ்நாட்டைப் பார்த்து மற்ற மாநிலங்கள் திட்டங்களை கொண்டு வந்து அமல்படுத்தி வருகிறார்கள். ஏன் ஒன்றிய அரசே தமிழக அரசு திட்டங்களை காப்பியடித்து வருகிறது.

மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் முன்னோடியாக திகழும் திமுக அரசு மீண்டும் அமைய வேண்டும் என மக்கள் முடிவெடுத்து விட்டார்கள். எனவே வரும் தேர்தலிலும் தி.மு.க தான் வெற்றி பெறும். மீண்டும் முதல்வராக மு.க. ஸ்டாலின் வருவார். என்னை வெற்றி பெறச் செய்தால் தஞ்சை சட்டமன்ற தொகுதியின் தேவைகளை நிறைவேற்ற பாடுபடுவேன். தஞ்சாவூர் மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றவுடன் வார்டு வார்டாக நேரில் சென்று மக்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டு அறிந்து அவற்றை நிறைவேற்றி தந்துள்ளேன். மேலும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன்.

தற்போது தஞ்சை சட்டமன்றத் தொகுதி முழுவதும் மக்களின் தேவைகளை அறிந்து அதை நிறைவேற்றி தர முழுமையாக பாடுபடுவேன். நான் வெற்றி பெற்றால் தொகுதி மக்கள் அனைவரும் என்னை எளிதில் சந்தித்து கோரிக்கைகளை தெரிவிக்கலாம். சட்டமன்றத் தொகுதி முழுவதும் பகுதி வாரியாக நானே நேரில் வருகை தந்து மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவேன் என்பதை உறுதியுடன் கூறிக் கொள்கிறேன் என்றார். எனவே தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் எனக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

பின்னர் மாலை தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலை டேனியல் தாமஸ் நகரிலிருந்து பிரச்சாரத்தை வேட்பாளர் சண்.ராமநாதன் தொடங்கினார். அப்பகுதியில் 45,50,51 வார்டுகளில் வேட்பாளர் சண்.ராமநாதன் திறந்த ஜீப்பில் ஒவ்வொரு தெருவாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வேட்பாளருடன் எம்.பி.முரசொலி, சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான கூட்டணி கட்சியினர் வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

சென்ற பகுதிகளில் வேட்பாளர் சண். ராமநாதனுக்கு மலர்களை தூவி பெண்கள் உற்சாக வரவேற்பளித்தனர். சிறுவர்கள் குழந்தைகள் வேட்பாளருடன் கை குலுக்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். செல்லும் இடமெல்லாம் திமுக வேட்பாளர் சண்.ராமநாதனுக்கு மலர் மழையை மக்கள் பொழிவிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You Might Also Like

பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை அவசியம்: பிரேமலதா விஜயகாந்த்

நகரங்களில் சுகாதாரம் மற்றும் பசுமை மேம்பாடு: 6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்

நதிநீர் இணைப்பு காலத்தின் கட்டாயம்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

வைகோ விளக்கம்: அதிமுக எம்எல்ஏக்கள் தவெக இணைப்பில் ‘குதிரை பேரம்’ குற்றச்சாட்டை ஏற்கவில்லை

ஊழலற்ற தூய்மையான ஆட்சிதான் முதல்வரின் நோக்கம்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

TAGGED:DMK candidateEnthusiasmintense campaignShan RamanathanWelcomewill meet the people in personஉற்சாகம்சண்.ராமநாதன்திமுக வேட்பாளர்தீவிர பிரச்சாரம்மக்களை நேரில் சந்திப்பேன்வரவேற்பு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
விளையாட்டு

இந்தியாவில் ஃபிபா உலகக் கோப்பையை ஒளிபரப்பும் ஜீ நிறுவனம்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?