By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    நேர்காணலை பாதியில் நிறுத்திய டிரம்ப்… என்.பி.சி. தொகுப்பாளருடன் கடும் வாக்குவாதம்!
    1 Min Read
    ஹோர்முஸ் ஜலசந்தி அருகே 4 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன: அமெரிக்கா தகவல்
    1 Min Read
    இம்ரான்கான் தம்பதியை நள்ளிரவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற சர்ச்சை
    1 Min Read
    ஈரான் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய முடியவில்லை: ஐ.நா. முகமை
    1 Min Read
    மோடி என் நல்ல நண்பர்; இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் விரைவில் – டிரம்ப்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    இந்தியா – இந்தோனேசியா உறவை வலுப்படுத்த பேச்சுவார்த்தை… மோடி பயணத்திற்கு முன் முக்கிய சந்திப்பு!
    1 Min Read
    நடிகர் சலீம் குமார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்… “மறக்க முடியாத கலைஞர்” என புகழாரம்!
    1 Min Read
    அமெரிக்காவில் தெலுங்கானா இளைஞர் சுட்டுக்கொலை… உடலை இந்தியா கொண்டு வர குடும்பம் கோரிக்கை!
    1 Min Read
    கடும் வெயில் எதிரொலி… தெலுங்கானாவில் பள்ளிகள் திறப்பு ஜூன் 15-க்கு ஒத்திவைப்பு!
    1 Min Read
    திருமணத்திற்குப் பிறகு கணவரிடம் உண்மையை கூறிய இளம்பெண்… 6 ஆண்டுகள் பழைய பாலியல் வழக்கில் நடவடிக்கை!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    “காவல் நிலையங்கள் தூய்மையாக இருக்க வேண்டும்”… சென்னை கமிஷனர் அமல்ராஜ் அதிரடி உத்தரவு!
    1 Min Read
    ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை நாளை தொடக்கம்?… பெண்கள் பாதுகாப்புக்கான புதிய திட்டம்!
    1 Min Read
    போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அதிரடி வேட்டை… ‘மேக்ஸ்’ மோப்பநாய் களமிறங்கியது!
    1 Min Read
    ESIC மருத்துவ இடஒதுக்கீட்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஜூன் 21 கடைசி நாள்
    1 Min Read
    தமிழகத்தில் வெயில் சதமடிப்பு: மீனம்பாக்கத்தில் 104.72 டிகிரி பாரன்ஹீட் பதிவு
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ஜம்முவிற்கு இன்று பிரதமர் மோடி பயணம்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > ஜம்முவிற்கு இன்று பிரதமர் மோடி பயணம்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
அரசியல் செய்திகள்

ஜம்முவிற்கு இன்று பிரதமர் மோடி பயணம்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

Nagaraj
Last updated: June 6, 2025 1:28 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

ஜம்மு: பிரதமர் மோடி ஜம்மு பயணம்… ஆபரேஷன் சிந்தூா் வெற்றிகர நடவடிக்கைக்கு பிறகு முதல் முறையாக, பிரதமா் நரேந்திர மோடி ஜம்மு-காஷ்மீருக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 6) பயணம் மேற்கொள்கிறாா். அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

காஷ்மீா் பகுதிக்கு நேரடி ரயில் போக்குவரத்தை அளிக்கும் உதம்பூா்-ஸ்ரீநகா்-பாரமுல்லா ரயில் வழித்தட திட்டத்தின் நிறைவாக, கத்ரா-ஸ்ரீநகா் இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கிவைக்கும் பிரதமா், அந்த வழித்தடத்தில் உள்ள செனாப் பாலம் (உலகின் உயரமான ரயில் பாலம்), அன்ஜி பாலம் ( நாட்டின் முதலாவது கம்பி வட ரயில் பாலம்) ஆகியவற்றையும் நாட்டுக்கு அா்ப்பணிக்க உள்ளாா்.

இவ்விரு பாலங்களும் நாட்டின் நவீன பொறியியல் அதிசயங்களாக விளங்குகின்றன. ஒட்டுமொத்தமாக ரூ.46,000 கோடிக்கும் மேல் மதிப்புள்ள வளா்ச்சித் திட்டங்களை பிரதமா் மோடி தொடங்கிவைக்க உள்ளாா். பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்கு பிறகான பிரதமரின் முதல் ஜம்மு-காஷ்மீா் பயணம் இது என்பதால் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

காஷ்மீா் நேரடி ரயில் சேவை: 272 கி.மீ. தொலைவு கொண்ட உதம்பூா்-ஸ்ரீநகா்-பாரமுல்லா ரயில் வழித்தட திட்டம் கடந்த 1997-இல் தொடங்கப்பட்டது. இதில் 209 கி.மீ. தொலைவு வழித்தடம் பல்வேறு கட்டங்களாக திறக்கப்பட்டது. இறுதியாக, சங்கல்தன்-ரியாசி இடையிலான 46 கி.மீ. வழித்தடம் கடந்த ஆண்டு ஜூனிலும், ரியாசி-கத்ரா இடையிலான 17 கி.மீ. வழித்தடம் கடந்த ஆண்டு டிசம்பரிலும் நிறைவடைந்தது.

ரூ.43,780 கோடி செலவில் கட்டமைக்கப்பட்ட இந்த வழித்தடத்தில் 36 சுரங்கங்களும் (119 கி.மீ. தொலைவு), 943 பாலங்களும் அமைந்துள்ளன. இதில் 12.77 கி.மீ. தொலைவுள்ள டி-50 சுரங்கம், நாட்டிலேயே மிகப் பெரிய ரயில் சுரங்கம் என்ற சிறப்புக்குரியதாகும்.

ஜம்மு-காஷ்மீா் பயணத்தில், ரியாசி மாவட்டத்தில் உள்ள செனாப் பாலம், அன்ஜி பாலத்தை நாட்டுக்கு அா்ப்பணிக்கும் பிரதமா் மோடி, கத்ரா ரயில் நிலையத்தில் இருந்து கத்ரா-ஸ்ரீநகா் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கிவைக்கிறாா்.

உயரமான பகுதிகளில் இயக்கும் வகையில் இந்த ரயில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு பிரதமரின் இந்தப் பயணம் அமைந்துள்ளதால், ராணுவம், துணை ராணுவம், காவல்துறை, உளவுத் துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.

ஆய்வு: ஜம்மு-காஷ்மீரில் பிரதமா் பயணிக்கும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். முதல்வா் ஒமா் அப்துல்லா, மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங் ஆகியோரும் கூட்டாக நேரில் ஆய்வு மேற்கொண்டனா்.

You Might Also Like

“உதயநிதி தலைமையில் திமுக பெரும் தோல்வி சந்திக்கும்”… மாணிக்கம் தாகூர் கடும் விமர்சனம்!

இனி சார்பதிவாளர் அலுவலகம் செல்ல தேவையில்லை… வருகை இல்லா ஆவணப்பதிவு விரைவில் கட்டாயம்!

இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு… ஜெய்ராம் ரமேஷ் தகவல்!

கோயில் தங்க டெபாசிட் முறைகேடு புகார்… உண்மை இருந்தால் நடவடிக்கை: அமைச்சர் நிர்மல்குமார்!

“மக்கள் கொஞ்சம் கால அவகாசம் தர வேண்டும்”… த.வெ.க. ஆட்சி குறித்து அமைச்சர்கள் நம்பிக்கை!

TAGGED:InspectionPrime Minister ModiRailwaysSecurity ArrangementsTodayTravelUnion Ministerஆய்வுஇன்றுபயணம்பாதுகாப்பு ஏற்பாடுகள்பிரதமர் மோடிமத்திய அமைச்சர்ரயில்வே துறை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்

“உதயநிதி தலைமையில் திமுக பெரும் தோல்வி சந்திக்கும்”… மாணிக்கம் தாகூர் கடும் விமர்சனம்!

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?