புதுடில்லி: தமிழ்நாட்டின் திட்டங்களுக்கான நிதியை எப்போது விடுவிப்பீர்கள்? என்று நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் கேள்விகளை அடுக்கினர்.
2026 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மாநிலங்களவையில் தமிழ்நாட்டின் நலன்சார்ந்த மற்றும் நிலுவையில் உள்ள பல்வேறு திட்டங்களின் நிலை, அவற்றிற்கு எப்போது நிதி ஒதுக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர் தி.மு.க தி.மு.க எம்.பிக்கள். அதன் விவரம் பின்வருமாறு.
தமிழ்நாட்டில் பிரதம மந்திரி கிசான் சம்பதா யோஜனா திட்டத்தின் கீழ் உள்ள திட்டங்கள் குறித்து திமுக எம்.பி. ஆர். கிரிராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் தெரிவித்தது பின்வருமாறு,
வேளாண் பதப்படுத்துதல் மற்றும் உணவுப் பரிசோதனை ஆய்வகங்கள் திட்டம், மெகா உணவுப் பூங்காக்கள் திட்டம் ஆகியவற்றின் கீழ் செயல்பாட்டில் உள்ள திட்டங்கள் குறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர். கிரிராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.