சென்னை: முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு அண்மையில்தான் துறைகள் ஒதுக்கப்பட்டன. 22 துறைகள் யாருக்கும் ஒதுக்கப்படாத நிலையில், நாளை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
புதிய அமைச்சர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைக்க, கேரளாவில் இருந்து ஆளுநர் அர்லேகர் இன்று சென்னை வருகிறார். அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு இடங்கள் வழங்கப்பட உள்ளன. கிள்ளியூர் ராஜேஷ்குமார், மேலூர் விஸ்வநாதன் அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது.