‘துரோகிகளின் வாதங்களால் அதிமுகவை அசைக்க முடியாது’ என சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். மதுரையில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது:- எம்ஜிஆர் காலத்தில் அதிமுகவில் 16 லட்சம் தொண்டர்கள் இருந்தனர். அவருக்குப் பின் வந்த ஜெயலலிதா, பல்வேறு சோதனைகளை கடந்து ஒன்றரை கோடி தொண்டர்களை உருவாக்கி அதிமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வந்தார். அதிமுகவுக்கு இப்போது கிடைத்திருக்கும் தெய்வீக வரம் பழனிசாமி.
ஜெயலலிதா சந்தித்த சோதனைகள் போல் அவரும் பல சோதனைகளை சந்தித்து ஒருங்கிணைந்த அ.தி.மு.க. 11 மருத்துவக் கல்லூரிகள், 7.5 சதவீத இடஒதுக்கீடு, 2,000 அம்மா மினி கிளினிக்குகள், 6 புதிய மாவட்டங்கள், காவிரிப் பிரச்னைக்குத் தீர்வு, முல்லைப் பெரியாறு தீர்ப்பை அமல்படுத்துதல் எனப் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை ஒரே ஆண்டில் பழனிசாமி நிறைவேற்றியுள்ளார். முதல்வர் பதவி என்பது அலங்காரப் பதவி அல்ல, மக்களுக்குச் சேவை செய்யும் பதவி என்று புதிய இலக்கணத்தை உருவாக்கினார். தற்போது எதிரிகள், துரோகிகள் போடும் வாதங்கள் எல்லாம் அதிமுகவை எந்த வகையிலும் அசைக்க முடியாது. இதனால் அதிமுகவுக்கு பாதிப்பு இல்லை. மக்களால் பாதுகாக்கப்படுற கட்சி. இவ்வாறு அவர் கூறினார்.