By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல்: 2 இந்திய அமெரிக்கர்கள் போட்டி
    1 Min Read
    உக்ரைன் தலைநகரில் ரஷ்ய ஏவுகணைகள் தாக்குதல்
    1 Min Read
    ஹோர்முஸ் ஜலசந்தியை திறப்பதற்கான ஒப்பந்தம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
    1 Min Read
    18 வயதில் பேராசிரியர்! உலகின் இளம் பேராசிரியர் என்ற கின்னஸ் சாதனை படைத்த நாதன் தாமஸ்
    1 Min Read
    இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த 112 பேரின் உடல்கள் மீட்பு! காசாவில் கூட்டு இறுதிச்சடங்கு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    மகாராஷ்டிராவில் ‘அனலாக் பன்னீர்’ விற்பனைக்கு தடை!!
    0 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு
    1 Min Read
    தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
    1 Min Read
    விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்துக்கு ரூ.7,432 கோடி
    1 Min Read
    டாஸ்மாக் கடைகளில் அனைத்து மதுபானங்களுக்கும் ரசீது கட்டாயம்! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
    1 Min Read
    தமிழக நிதிநிலையை சீரமைக்க குறைந்தது 2 ஆண்டுகள் தேவை! நிதித்துறை செயலர் தகவல்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: டாஸ்மாக் கடைகளில் அனைத்து மதுபானங்களுக்கும் ரசீது கட்டாயம்! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > டாஸ்மாக் கடைகளில் அனைத்து மதுபானங்களுக்கும் ரசீது கட்டாயம்! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
தமிழகம்

டாஸ்மாக் கடைகளில் அனைத்து மதுபானங்களுக்கும் ரசீது கட்டாயம்! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Nagaraj
Last updated: August 6, 2026 9:34 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விற்பனை செய்யப்படும் அனைத்து மதுபானங்களுக்கும் கட்டாயம் ரசீது வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செம்பியத்தைச் சேர்ந்த ஜி.தேவராஜன் தொடர்ந்த பொதுநல வழக்கில், சென்னை பெரம்பூர், கொளத்தூர், மாதவரம், செம்பியம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், வாடிக்கையாளர்களுக்கு ரசீது வழங்கப்படுவதில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் நிர்வாகம் சார்பில், மனுதாரர் குறிப்பிட்ட கடைகளில் 5 கடைகள் மூடப்பட்டுவிட்டதாகவும், எஞ்சிய கடைகளின் இருப்பு மற்றும் விற்பனை பதிவேடு தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதி, டாஸ்மாக் கடைகளில் ரசீது புத்தகங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்றும், வாடிக்கையாளர்களுக்கு ரசீதுகள் வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

எனவே, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் அனைத்து மதுபானங்களுக்கும் கட்டாயம் ரசீது வழங்க வேண்டும் என்றும், கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டார். உத்தரவை அமல்படுத்தியது தொடர்பாக ஆகஸ்ட் 7-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

 

You Might Also Like

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்துக்கு ரூ.7,432 கோடி

தமிழக நிதிநிலையை சீரமைக்க குறைந்தது 2 ஆண்டுகள் தேவை! நிதித்துறை செயலர் தகவல்

தொடை சதையை குறைக்க சில எளிய பயிற்சிகள் உங்களுக்காக!!!

TAGGED:BillLiquorMadras High CourtOverpricingTamil Nadu Governmentகூடுதல் விலைசென்னை உயர் நீதிமன்றம்டாஸ்மாக்தமிழக அரசு Tasmacமதுபானம்ரசீது
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?