By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    பயன்படுத்திய பள்ளி நீச்சல் உடைகளுக்கு திடீர் தடை: மெர்காரியின் அதிரடி முடிவு
    1 Min Read
    கொசோவோ நாடாளுமன்றத்தில் பரபரப்பு: இடைக்கால பிரதமர் மீது முட்டை வீச்சு
    1 Min Read
    காங்கோவில் வேகமெடுக்கும் எபோலா: தடுப்பூசி இல்லாத அபூர்வ வைரஸ் அச்சுறுத்தல்
    2 Min Read
    ஈரானுடனான போருக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம்: அமெரிக்க தளபதி டான் கெய்ன் வலியுறுத்தல்
    2 Min Read
    அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல்: 2 இந்திய அமெரிக்கர்கள் போட்டி
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    அங்கித் திவாரி லஞ்ச வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்றலாம் என உச்சநீதிமன்றம் கருத்து
    1 Min Read
    மகாராஷ்டிராவில் ‘அனலாக் பன்னீர்’ விற்பனைக்கு தடை!!
    0 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    ஊட்டச்சத்தும், மெக்னீசிய சத்தும் அதிகம் கொண்ட காலிஃப்ளவர்
    2 Min Read
    அடர்த்தியான கண் இமைகளுக்கு ஆமணக்கு எண்ணெய் உதவுகிறது
    2 Min Read
    பிரதோஷ வழிபாட்டுக்காக நிலம் தானம்: 18-ம் நூற்றாண்டு கல்வெட்டு மூலம் வெளிச்சத்துக்கு வந்த வரலாறு
    2 Min Read
    மாணவர்கள் கண்டெடுத்த அரிய காசுகள் பல்கலைக்கழகத்துக்கு வழங்கல்: வரலாற்றை தேடும் திருப்புல்லாணி மாணவர்கள்
    1 Min Read
    மச்சத்திற்கும் நம் வாழ்விற்கும் உள்ள இணைப்பு… தெரிந்து கொள்ளுங்கள்!!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: மாணவர்கள் கண்டெடுத்த அரிய காசுகள் பல்கலைக்கழகத்துக்கு வழங்கல்: வரலாற்றை தேடும் திருப்புல்லாணி மாணவர்கள்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > மாணவர்கள் கண்டெடுத்த அரிய காசுகள் பல்கலைக்கழகத்துக்கு வழங்கல்: வரலாற்றை தேடும் திருப்புல்லாணி மாணவர்கள்
தமிழகம்

மாணவர்கள் கண்டெடுத்த அரிய காசுகள் பல்கலைக்கழகத்துக்கு வழங்கல்: வரலாற்றை தேடும் திருப்புல்லாணி மாணவர்கள்

Nagaraj
Last updated: August 9, 2026 7:11 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

ராமநாதபுரம்: திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பல ஆண்டுகளாகக் கண்டெடுத்து பாதுகாத்து வந்த பழமையான காசுகள், ஓலைச்சுவடி, எழுத்தாணி உள்ளிட்ட தொல்லியல் பொருட்கள், திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை மாணவர்களின் ஆய்வுக்காக வழங்கப்பட்டுள்ளன.

திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வரும் வே. இராஜகுரு, மாணவர்கள் சேகரித்த பொருட்களை பல்கலைக்கழகத்திடம் ஒப்படைத்துள்ளார்.

2010 முதல் தொடரும் தொல்லியல் தேடல்

பள்ளியில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் மாணவர்களுக்கு பழமையான நாணயங்கள், பானை ஓடுகள் மற்றும் வரலாற்றுச் சின்னங்களை அடையாளம் காணுதல், கல்வெட்டுகளைப் படித்தல், படியெடுத்தல், கோயில் கட்டடக்கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக மாணவர்கள் தங்களது பகுதிகளில் வரலாற்றுத் தடயங்களைத் தேடி கண்டறிந்து வருகின்றனர்.

சுதர்சன் என்ற மாணவர் பால்கரையில் கண்டெடுத்த டச்சுக்காரர்களின் பணமான 2 துட்டு, பாதசெல்வம் கண்டெடுத்த இலங்கை சதம் காசு, தென்னாப்பிரிக்க பென்னி காசு, தாஜ்குமார் பஞ்சந்தாங்கியில் கண்டெடுத்த ஈழக்காசு, சமயமுத்து சேதுக்கரையில் கண்டெடுத்த அம்மன் சல்லிக்காசு, விசாலி வழங்கிய மலேயா சென்ட் காசு உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

மேலும் ஓலைச்சுவடி மற்றும் எழுத்தாணியும் பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

200-க்கும் மேற்பட்ட பொருட்கள்

பல்கலைக்கழக தொல்லியல் துறை தலைவர் பொறுப்பு சுதாகர் கூறுகையில், ஆசிரியர் இராஜகுரு தனது சொந்த முயற்சியில் கள ஆய்வு மேற்கொண்டு கண்டறிந்த 200-க்கும் மேற்பட்ட தொல்லியல் பொருட்களை ஏற்கனவே துறைக்கு வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

தற்போது வழங்கப்பட்டுள்ள காசுகள், ஓலைச்சுவடி மற்றும் எழுத்தாணி ஆகியவை தொல்லியல் மாணவர்களின் ஆய்வுக்கும் கல்விக்கும் பெரிதும் உதவும் என்றும் அவர் கூறினார்.

பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர், ஆசிரியர் இராஜகுரு மற்றும் மாணவ, மாணவிகளை பாராட்டினார்.

 

You Might Also Like

ஊட்டச்சத்தும், மெக்னீசிய சத்தும் அதிகம் கொண்ட காலிஃப்ளவர்

அடர்த்தியான கண் இமைகளுக்கு ஆமணக்கு எண்ணெய் உதவுகிறது

பிரதோஷ வழிபாட்டுக்காக நிலம் தானம்: 18-ம் நூற்றாண்டு கல்வெட்டு மூலம் வெளிச்சத்துக்கு வந்த வரலாறு

மச்சத்திற்கும் நம் வாழ்விற்கும் உள்ள இணைப்பு… தெரிந்து கொள்ளுங்கள்!!!

கோயில்களில் மணி ஓசை ஒலிக்கப்படுவதன் காரணம் இதுதான்! தெரிந்து கொள்ளுங்கள்

TAGGED:Ancient CoinsArchaeologyhistoryManonmaniam Sundaranar UniversitystudentsThiruppullaniதிருப்புல்லாணிதொல்லியல்பழமையான காசுகள்மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்மாணவர்கள்வரலாறு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?