கும்பகோணம்:_ கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோவிலில் தேங்கிய மழைநீர் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.
கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் பிரசித்தி பெற்ற கபர்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று மதியம் பெய்த கனமழையால் கபர்தீஸ்வரர் கோவில் வளாகம் முழுவதும் முழங்கால் அளவுக்கு நீர் சூழ்ந்தது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். இக்கோவில் கடந்த மாதம் 4.50 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்டடு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது .
மேலும் பழமையான கோயில் என்பதால் வெளிப்புறம் உள்ள சாலைகள் உயர்ந்ததாலும் கோவில் உள்பகுதி பள்ளமானதால் மழை நீர் தேங்குவதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர் மேலும் அந்த மழை நீரை உடனடியாக அப்புறப்படுத்த கோயில் நிர்வாகத்தினர் தகுந்த முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.