சென்னை: பார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போக்குவரத்து சீராக இருக்க வேண்டும்; மேலும், மக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்முலா 4 கார் பந்தயத்துக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று தமிழக அரசு வாதிட்டது.
ஏற்கனவே உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகள் நிறைவேற்றப்படும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது.
போக்குவரத்து மாற்றம் செய்யப்படும். மருத்துவமனை செல்வோருக்கு எந்த இடையூறும் ஏற்படாது என தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.