சென்னை: பாதாம் பருப்புகளால் குழந்தைகளுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். பாதாம் பருப்பில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், கால்சியம், விட்டமின் ஏ, விட்டமின் இ, இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், விட்டமின் பி6 மற்றும் பல சத்துக்கள் உள்ளது.
குளிர் தாங்கும் சக்தி
பாதாம் பருப்பு கலந்த பாலை குளிர்காலத்தில் அருந்துவதால் குழந்தையின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும் குளிரைத் தாங்கக்கூடிய சக்தியைக் குழந்தையின் உடல் பெறுகின்றது.
மூளை வளர்ச்சி
பாதாம் பருப்பில் உள்ள புரதச் சத்தானது மூளையின் இயக்க ஆற்றலை அதிகரிக்கிறது. மேலும் நினைவாற்றல் மற்றும் மூளையின் சக்தியைப் பெருகுகின்றது. குழந்தையின் மூளையில் உள்ள செல்களில் உள்ள குறைபாடுகளைச் சரி செய்து, அவர்களைப் புத்திசாலியாக மாற்றுகின்றது.
எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது
குளிர் காலத்தில் சளி ,இருமல் போன்ற தொல்லைகள் குழந்தைகளுக்கு ஏற்படுவது இயல்புதான். இந்த மாதிரி நேரத்தில் பாதாம் கலந்த பாலை குழந்தைக்குத் தினமும் பருக தருவதன் மூலம், அவர்களின் உடலின் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்துக் கொள்ள முடியும். இந்த பால் சாப்பிடுவதன் மூலம் குழந்தைகள் எளிதில் குளிர்காலத்தில் நோய்த் தொற்றுக்கு ஆளாக முடியாது.
கண்கள் ஆரோக்கியம் பெறும்
பாதாமில் நிறைந்துள்ள விட்டமின் ஏ சத்து கண்களின் வளர்ச்சிக்கு மிக மிக அவசியமானது. இதை சாப்பிடுவதன் மூலம் குழந்தைகளுக்குக் கண் சம்பந்தமான குறைபாடுகள் ஏற்படாது. கண் பார்வை கூர்மை அடையும்.