திருச்சி: திருச்சி 25வது வார்டு சண்முகா நகரில் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.
திருச்சி மாநகராட்சி 25வது வார்டு சண்முகா நகரில் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்ட வேண்டும் என்று திமுக மாமன்ற உறுப்பினர் நாகராஜ் மாமன்ற கூட்டத்தில் கோரிக்கை விடுத்தார்.
இதைத்தொடர்ந்து சண்முகா நகர் மேற்கு விஸ்தரிப்பு பகுதியில் 1.39 கோடி செலவில் 5 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கட்ட அனுமதி வழங்கப்பட்டது இதற்கான பூமி பூஜை சில மாதங்களுக்கு முன்பு நடத்தி கட்டுமான பணிகளை அமைச்சர்கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
கட்டுமான பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் அமைச்சர் கே என் நேரு கலந்துகொண்டு தண்ணீர் தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
இந்த விழாவில் பொதுமக்களுக்கு உணவு, சில்வர் குடம் உள்ளிட்டவற்றை அமைச்சர் வழங்கினார். இந்த விழாவில் மேயர் அன்பழகன், ஆட்சியர் சரவணன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாமன்ற உறுப்பினரும், திமுக தில்லைநகர் பகுதி செயலாளருமான நாகராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் மாநகராட்சி அலுவலர்கள் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.
இந்த புதிய குடிநீர் தொட்டி மூலம் சுமார் 4000 குடும்பங்கள் பயன்பெறும் என்று கவுன்சிலர் நாகராஜ் தெரிவித்தார்.