By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ புதிய டிரெய்லர் வெளியீடு
    1 Min Read
    ஜி7 மாநாட்டில் உலகத் தலைவர்களுடன் மோடி
    1 Min Read
    ஜி7 மாநாட்டில் மோடி – டிரம்ப் சந்திப்பு
    1 Min Read
    அமெரிக்க ராணுவ விமானம் விபத்து: 8 பேர் பலி
    1 Min Read
    சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஒருவர் பலி, 4 பேர் காயம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஹார்முஸ் பதற்றத்திலும் பாதுகாப்பாக சென்ற ‘திஷா’: இந்திய கப்பல்களுக்கு புதிய நம்பிக்கை!
    1 Min Read
    குஜராத்தில் அதிரடி சோதனை: 84 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!
    1 Min Read
    டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: 7 பேர் கைது!
    1 Min Read
    யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியீடு: மெயின் தேர்வுக்கு 13,343 பேர் தகுதி!
    1 Min Read
    கொல்கத்தாவில் யோகா தின விழா! பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்ட ஏற்பாடு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    முகத்தில் அதிகமாக எண்ணெய் வடிய இதுவும் ஒரு முக்கிய காரணம்!
    3 Min Read
    எண்ணெய்ப்பசை சருமத்தால் கவலைப்படுகிறீர்களா? இதோ இருக்கு எளியமுறையில் தீர்வு
    1 Min Read
    வியர்வை நாற்றத்தை தடுக்க என்ன செய்யலாம்??
    1 Min Read
    உடற்பயிற்சியின் மற்றொரு வடிவமாக திகழும் ஏரோபிக்ஸ் நடனம்
    1 Min Read
    இரவில் நன்றாக தூங்க வேண்டுமா… உணவுகளை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: நீண்ட காலமாக அவதிப்பட்டு வந்த விவசாயி: உயர் சிகிச்சையில் தீர்வு கொடுத்தது காமாட்சி மருத்துவமனை
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > நீண்ட காலமாக அவதிப்பட்டு வந்த விவசாயி: உயர் சிகிச்சையில் தீர்வு கொடுத்தது காமாட்சி மருத்துவமனை
தமிழகம்

நீண்ட காலமாக அவதிப்பட்டு வந்த விவசாயி: உயர் சிகிச்சையில் தீர்வு கொடுத்தது காமாட்சி மருத்துவமனை

Nagaraj
Last updated: April 7, 2026 3:56 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

தஞ்சாவூா்: நீண்ட ஆண்டுகளாக கட்டுப்பாடற்ற உயர்ந்த இரத்த அழுத்தத்தால் அவதிப்பட்டு வந்த தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 57 வயது விவசாயிக்கு ஏற்பட்டு இருந்த ரத்த குழாய் அடைப்புகளை சரி செய்து சாதனை படைத்துள்ளது தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மருத்துவமனை.

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 57 விவசாயி ஒருவர் நீண்ட ஆண்டுகளாக கட்டுப்பாடற்ற உயர்ந்த இரத்த அழுத்தத்தால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் பல்வேறு சிகிச்சைகள் எடுத்தும் தீர்வு கிடைக்காமல் மிகுந்த வேதனையுடன் இருந்து வந்தார். இந்நிலையில், தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மருத்துவமனைக்கு வழக்கமான பரிசோதனைக்காக அந்த விவசாயி வந்தார். ஆரம்ப பரிசோதனையில் அவரது ரத்த அழுத்தம் மிகவும் அதிகமாக இருந்தது. ஆனால் அது தமக்கு எப்போதும் இருப்பதால் சாதாரணம் என அவர் கருதினார்.

விவசாயியை பரிசோதித்த டாக்டர் நிஷாந்த் மேலும் விரிவான உடற்பரிசோதனைகளை மேற்கொண்ட போது சிறுநீரகத்திற்கு செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு இருப்பது என சந்தேகிக்கப்பட்டது. அதனை உறுதிப்படுத்த ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனையில் சிறுநீரகத்திற்கு செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. இது மிகவும் முக்கியமான கண்டுபிடிப்பாகும்.

இதையடுத்து அந்த விவசாயின் குடும்பத்தாரின் ஒப்புதலுடன், ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டரின் இருதயநோய் சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் நிஷாந்த் திறமை வாய்ந்த மருத்துவக்குழுவினர் மற்றும் அதிநவீன தொழில்நுட்ப கேத் லேப் வசதிகளுடன் குறுகிய நேரத்தில் சிறுநீரக ரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்கி ஸ்டென்ட் பொருத்தி வெற்றிகரமாக சிகிச்சை அளித்தார். மேலும், தேவையான இடங்களில் இதய ரத்தக் குழாய்களிலும் ஸ்டென்ட் பொருத்தி சிகிச்சை செய்யப்பட்டது.

சிகிச்சைக்கு பின்னர், விவசாயியின் ரத்த அழுத்தம் குறைந்து, உடல்நிலை மேம்பட்டு, அவர் தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் இயல்பான வாழ்க்கையை நடத்தி வருகிறார். விவசாயிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர் நிஷாந்த் விளக்கி கூறினார்.

இதில் மருத்துவமனை துணை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் தீபக் நாராயணன், இருதய சிகிச்சை மூத்த மருத்துவரும் எலக்ட்ரோபிசியோலஜி சிறப்பு நிபுணருமான டாக்டர் அன்பரசன், இருதய சிகிச்சை சிறப்பு நிபுணர் டாக்டர் இளங்குமரன் மற்றும் டாக்டர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது

தன்னை குணப்படுத்திய மருத்துவர்கள், மருத்துவமனை நிர்வாகம் மற்றும் பணியாளர்களுக்கு விவசாயி மற்றும் அவரது குடும்பத்தினர் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டார்.

தனது உடல்நலம் தேறியதற்கு தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மருத்துவமனை மருத்துவக்குழுவினர் அளித்த உயர்தர சிறப்பான சிகிச்சைகளே காரணம். இன்று இயல்பான நிலைக்கு தான் திரும்பி தனது பணிகளை பார்க்க காமாட்சி மருத்துவமனை மருத்துவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

You Might Also Like

தஞ்சைக்கு மஞ்சள் அலர்ட்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!

27 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; வானிலை ஆய்வு மையம் தகவல்

முகத்தில் அதிகமாக எண்ணெய் வடிய இதுவும் ஒரு முக்கிய காரணம்!

எண்ணெய்ப்பசை சருமத்தால் கவலைப்படுகிறீர்களா? இதோ இருக்கு எளியமுறையில் தீர்வு

வியர்வை நாற்றத்தை தடுக்க என்ன செய்யலாம்??

TAGGED:farmersolutionThanjavurtreatmentuncontrolled blood pressureஉயர் சிகிச்சைகட்டுப்பாடற்ற ரத்த அழுத்தம்காமாட்சி மருத்துவமனைசிகிச்சைதஞ்சாவூர்தீர்வுநலம்பெற்றார்விவசாயி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சிறிய செய்தி

டாஸ் வென்ற ஜிம்பாப்வே

By Nagaraj 0 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?