மதுரை: மதுரையில் இந்து முன்னணி சார்பில் இன்று நடைபெற்ற முருகன் மாநாட்டில் மொத்தம் 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் மற்றும் அந்த மலை குமரனுக்கே சொந்தமானது என முருகன் மலைகளை பாதுகாப்பதற்கு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

மற்றும், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி அளித்த பிரதமர் மோடியை பாராட்டும் தீர்மானமும் இந்த மாநாட்டில் இடம்பெற்றது. தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருந்து இந்து சமய அறநிலையத்துறையினர் வெளியேற வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
தேர்தல்களில் இந்துக்கள் ஒற்றுமையாக இருந்து வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும் என்பது முக்கிய தீர்மானமாகவும் அமைகிறது. அதோடு, சஷ்டி தினத்தில் சஷ்டி கவசத்தை ஒன்றிணைந்து பாடுவது உள்ளிட்ட விவரங்களும் உள்ளன.
மதுரை முருகன் மாநாட்டின் 6 தீர்மானங்கள்:
- திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்.
- பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி அளித்த பிரதமர் மோடியுக்கு பாராட்டுகள்.
- திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே சொந்தம் என முருகன் மலைகளை காக்க வேண்டும்.
- தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருந்து இந்து சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டும்.
- தேர்தல்களில் இந்துக்கள் ஒற்றுமையாக இருந்து இந்துக்களின் வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும்.
- சஷ்டி தினத்தன்று சஷ்டி கவசத்தை ஒன்று சேர்ந்து பாட வேண்டும்.