சென்னை: சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் இரவு முழுவதும் பேருந்தில் அலைக்கழிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி, மாநகர பேருந்திலேயே அடைத்து வைக்கப்பட்டு, இரவு முழுவதும் அலைக்கழிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையை ஆயிரத்து ஐநூறு ரூபாயில் இருந்து, ஆறாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கக்கோரி, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே தொடர் போராட்டம் நடைபெற்றது.
இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டு, நள்ளிரவு 2 மணி வரை அலைக்கழிக்கப்பட்டு, பின்னர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள பேருந்து ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் இரவு முழுவதும் உணவு, குடிநீரின்றி அவதிக்குள்ளான மாற்றுத்திறனாளிகள், பேருந்திலேயே படுத்து உறங்கினர். ஓட்டுக்காக மகளிருக்கு ஐந்தாயிரம் ரூபாய் வரை வழங்கும் முதலமைச்சர், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை உயர்த்தி வழங்க முடியாதா? என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் ஓயாது என்றும்