ராமநாதபுரம்: மருத்துவர் மீது கத்தியால் தாக்கப்பட்டதன் எதிரொலி.. இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளை பார்க்க வருபவர்களிடம் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை, கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. இதற்கு கண்டனமட் தெரிவித்து நேற்று தமிழகம் முழுவதும் டாக்டர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.
இந்நிலையில் இராமநாதபுரம் அரசு மருத்துவனையில் நோயாளிகளுடன் வருபவர்கள் மற்றும் நோயாளிகளை பார்க்க வருபவர்கள் தீவிர சோதனைக்கு பிறகே மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.