சென்னை :தமிழகத்தில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு முன்பு வரை தக்காளி விலை உச்சத்தில் இருந்து வந்த நிலையில் தற்போது சரசரவென விலை குறைந்து கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது
உலகத்தில் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளதால், விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஜனவரி கடைசி தொடங்கி மார்ச் மாதம் வரை தக்காளி சீசன் இருக்கும்.
தற்போது விளைச்சல் அதிகரிப்பால் மார்க்கெட்டுக்கு வரத்து 30 -50% அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பரில் கிலோ ₹60 – ₹70 வரை விற்பனையான நிலையில், நேற்று கிலோ ₹10- ₹15க்கு விற்கப்பட்டது. இதனால் விவசாயிகள் விரக்தியடைந்தனர்.
விலை உயர்ந்தால் உச்சத்திற்கு செல்வதும் விளைச்சல் அதிகரித்தால் அதல பாதாளத்துக்கு செல்வதுமாக தக்காளி விவசாயிகளை பாடாய்படுத்தி வருகிறது. இருப்பினும் தக்காளி விலை குறைந்துள்ளதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் அதிக அளவில் வாங்கி செல்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.