மதுரை : மதுரை சோழவந்தானை
கிரில் சிக்கன் சாப்பிட்ட3 குழந்தைகள் உள்பட 22 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
மதுரை சோழவந்தானில் கிரில் சிக்கன் சாப்பிட்ட 3 குழந்தைகள் உள்பட 22 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்த தகவலை அடுத்து சம்பந்தப்பட்ட உணவகத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அங்கு கெட்டுப்போன சிக்கன் விற்பனை செய்ததாக அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
இந்த சம்பவம் சோழவந்தான் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதே போல் வேறு உணவகங்களில் கெட்டுப்போன உணவுகள் விற்கப்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.