சென்னை: ஒரு தெருவிலிருந்த தண்ணீரை எதிர் தெருவில் வெளியேற்றிய ஊழியர்களுடன் மக்கள் வாக்குவாதத்தில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை குரோம்பேட்டை ராதா நகர் 26ஆவது வார்டிலுள்ள ஏழுமலை தெருவில் தேங்கிய மழைநீரை டீசல் எஞ்சின் மூலம் எதிர் தெருவான வேலாயுதம் தெருவில் விட்டதால் அப்பகுதி மக்கள் தாம்பரம் மாநகராட்சி ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.
தங்கள் பகுதியில் குறைந்த அளவே தண்ணீர் தேங்கியதாகவும் எதிர் தெருவிலிருந்த தண்ணீரை வெளியேற்றியதன் காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டதாகவும் அவர்கள் கூறினர்.
தங்கள் தெருவிலிருந்து தண்ணீர் வெளியேறுவதற்கான வழியை ஏற்படுத்திய பின்னர் எதிர் தெரு தண்ணீரை வெளியேற்றுங்கள் எனக் கூறி எஞ்சினை அணைத்து வாக்குவாதம் செய்தனர்.