May 27, 2024

புரோட்டீன் நிறைந்த கேழ்வரகு கொள்ளு தோசை

தேவையான பொருட்கள் கேழ்வரகு – 1 கப், கொள்ளு – கால் கப், உளுந்து – 2 டீஸ்பூன், வெந்தயம் – 1 டீஸ்பூன், உப்பு – ருசிக்கேற்ப, நெய் – தேவைக்கேற்ப.

செய்முறை: கேழ்வரகு, கொள்ளு, வெந்தயம், உளுந்தை நன்கு கழுவி தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறவைத்தவற்றை மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும்.

அரைத்த மாவுடன் உப்பு சேர்த்து புளிக்க விடவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து கல் சூடானதும் மாவை மெல்லிய தோசையாக ஊற்றி 1 நிமிடம் நெய் தடவி மூடி வைத்து எடுக்கவும் . இப்போது சூப்பரான கேழ்வரகு கொள்ளு தோசை ரெடி. இதற்கு தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி அருமையாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!