ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பாதுகாப்பு பேச்சுவார்த்தைகளில் ஐரோப்பிய நாடுகளின் பங்கு குறித்து புதிய விவாதம் எழுந்துள்ளது.
ஐரோப்பிய நாடுகள் சார்பில் யார் பேசுவது என்பதில் ஒருமித்த முடிவு எட்டப்படவில்லை என்று ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் மற்றும் எதிர்கால ஐரோப்பிய பாதுகாப்பு அமைப்பு தொடர்பாக அமெரிக்கா, உக்ரைன், நேட்டோ மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பு இல்லாமல் நீண்டகால அமைதி ஒப்பந்தத்தை உருவாக்க முடியாது என்பதையும் ரஷ்யா தரப்பு ஒப்புக்கொண்டுள்ளது. இருப்பினும், பேச்சுவார்த்தையில் யார் பிரதிநிதித்துவம் செய்வது என்பது இன்னும் தெளிவாகவில்லை.
