ஓமன் கடல் பகுதியில் சென்ற சரக்குக் கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து கப்பலில் இருந்தவர்களை மீட்க ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய காவல்படையினர் விரைந்து செயல்பட்டனர். இந்த மீட்பு நடவடிக்கையில் 22 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட அனைவரும் அரபு நாட்டைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பலில் தீ பரவியதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கு முன்னதாக ஓமன் வளைகுடா பகுதியில் கோர் ஃபக்கான் நகருக்கு கிழக்கே சரக்குக் கப்பல் தொடர்பான பாதுகாப்பு சம்பவம் குறித்து இங்கிலாந்தின் கடல்சார் வர்த்தக நடவடிக்கை அமைப்புக்கும் தகவல் கிடைத்திருந்தது.
இந்தச் சம்பவம் கடல் வழி வர்த்தகப் போக்குவரத்தின் பாதுகாப்பு குறித்த கவலையை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வளைகுடா பகுதியில் நிலவும் அரசியல் மற்றும் ராணுவ பதற்றங்களுக்கு இடையே சரக்குக் கப்பல்களின் பாதுகாப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
