ஸ்பெயின் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள எல் ஹியெரோ தீவில் அகதிகள் மற்றும் குடியேறிகள் வருகை அதிகரித்துள்ளதால் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் தொடங்கியதிலிருந்து சுமார் 30 படகுகளில் 3,300-க்கும் மேற்பட்டோர் தீவுக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 11,400 மக்கள் மட்டுமே வசிக்கும் இந்தத் தீவில் திடீரென அதிக எண்ணிக்கையில் மக்கள் வந்திருப்பதால் தங்குமிடம், உணவு, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை ஏற்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
தற்காலிக முகாம்கள் அமைப்பதற்கும், மருத்துவ உதவிகளை வழங்குவதற்கும் கூடுதல் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். இதற்காக ஸ்பெயின் மத்திய அரசிடம் உள்ளூர் நிர்வாகம் உதவி கோரியுள்ளது.
அகதிகள் வருகை தொடர்ந்து அதிகரித்தால் தீவின் நிர்வாகம் மேலும் சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
