இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் உளவுத்துறை இயக்குனர் பைஸ் ஹமீது கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ.யின் முன்னாள் தலைமை இயக்குனர் பைஸ் ஹமீதை அந்நாட்டு ராணுவம் கைது செய்துள்ளது.
டாப் சிட்டி வீடு கட்டும் திட்டம் தொடர்பான அதிகார முறைகேடுகள் குறித்த புகார்களையடுத்து அவர் ராணுவ விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். பைஸ் ஹமீது மீது துறை சார்ந்த ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ராணுவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் உச்சநீதிமன்ற உத்தரவின்படி பைஸ் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான போதிய ஆதாரங்கள் இருப்பதாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.