திருச்சி: பிரதமர் மோடி தமிழகம் வருகையை முன்னிட்டு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதை ஒட்டி பிரதமரின் விமானத்தை திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்கி ஒத்திகை நடத்தப்பட்டது
பிரதமர் மோடி வரும் 27ம் தேதி தமிழகம் வருவதையொட்டி, திருச்சி விமானநிலையத்தில் பிரதமரின் வழக்கமான மிக நீள விமானம் தரையிறங்குவதற்கான ஒத்திகை நடத்தப்பட்டது.
மிக நீளமான இந்தவிமானம் நண்பகல் 12.25 மணியளவில் திருச்சி விமானநிலையத்தில் தரையிறங்கி மீண்டும் நண்பகல் 2.15 மணியளவில் புதுடெல்லி நோக்கி புறப்பட்டுச்சென்றது.
பிரதமரின் வருகையை முன்னிட்டு அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் பல்வேறு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.