By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    மியான்மரில் உள்நாட்டு போர்: ராணுவத்தின் கை மீண்டும் ஓங்குகிறது
    1 Min Read
    சிறுவனை கடத்திய வழக்கில் கனடாவில் இந்தியருக்கு சிறை தண்டனை
    1 Min Read
    ஆட்கள் நீக்கமா? இன்போசிஸ் தலைமை அதிகாரி கொடுத்த விளக்கம்
    1 Min Read
    ஹார்முஸ் நீரிணையை திறக்க என்ன செய்யலாம்… அதிபர் டிரம்ப்பின் அடுத்த திட்டம்
    1 Min Read
    ஈரானின் பொருளாதாரம் வீழ்ச்சியடைகிறது… அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    சர்வதேச விமானங்களுக்கான எரிபொருள் விலை உயர்வு… மத்திய அரசு அதிரடி
    1 Min Read
    திருமண இசை கச்சேரியால் 140 கோழிகள் பலி… போலீசில் புகார்
    2 Min Read
    அன்றாடம் சாப்பிடும் எந்தெந்த உணவுகள் எவ்வளவு நேரங்களில் ஜீரணமாகும் ?
    1 Min Read
    மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து புதுச்சேரி கலெக்டர் தகவல்
    2 Min Read
    தேர்தலுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை உயர்வா? மத்திய அரசு விளக்கம்
    3 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    வைட்டமின் சி, ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்த ஸ்ட்ராபெர்ரி
    1 Min Read
    நெயில் பாலிஷ் போட்டதும் உடனே காய வைப்பது எப்படி ?
    1 Min Read
    சருமத்தை இளமையாகவும், பொலிவுடனும் வைத்துக்கொள்ளும் ஸ்பூன் மசாஜ்
    2 Min Read
    எண்ணெய் சருமம் கொண்டவர்கள் சரும பராமரிப்பில் செய்யும் தவறுகள்
    1 Min Read
    ஊட்டசத்து மிகுந்த தக்காளி டோஸ்ட் செய்வது எப்படி?
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: கீழடி விவகாரத்தில் துணை நிற்போம்… எடப்பாடி பழனிசாமி உறுதி
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > கீழடி விவகாரத்தில் துணை நிற்போம்… எடப்பாடி பழனிசாமி உறுதி
அரசியல் செய்திகள்

கீழடி விவகாரத்தில் துணை நிற்போம்… எடப்பாடி பழனிசாமி உறுதி

Nagaraj
Last updated: July 30, 2025 6:04 pm
By Nagaraj 3 Min Read
Share
SHARE

மதுரை: கீழடி விவகாரத்தில் தி.மு.க. அரசுக்கு துணை நிற்போம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி அகழாய்வு மையத்தை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்கள் குறித்த விபரங்களை புத்தகங்களாக அ.தி.மு.க. ஆட்சியில் வெளியிடப்பட்டது. இது தொடர்பாக உரிய விளக்கமும் அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் பொதுமக்கள் இது தொடர்பாக அறிந்து கொள்ளும் வகையில் அகழாய்வில் கிடைத்த பொருட்களை தத்ரூபமாக காட்சிப்படுத்தி உள்ளோம்.

தமிழகத்தில் இதுவரை நடந்த 39 அகழாய்வு பணிகளில் 33 அ.தி.மு.க. ஆட்சியில் தான் நடத்தப்பட் டது. கீழடி அகழாய்வு என்பது மிக முக்கியமானதாகும். இங்கு கண்டறியப்பட்ட பொருட்கள் புளோரிடா கொண்டு செல்லப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் தற்போது கீழடி விவகாரத்தில் சிலர் அரசியல் செய்கின்றனர். அது யார் என எல்லோருக்கும் தெரியும்.

கீழடி குறித்த தொன்மையை ஆய்வகத்தில் கொடுத்து அ.தி.மு.க. ஆட்சியில் உறுதி செய்யப்பட்டது. ஆனால் இந்த அரசு இதற்கான நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும், முயற்சி செய்திருக்க வேண்டும். கீழடி தொடர்பாக மத்திய அரசு என்ன விளக்கம் கேட்டது, அதற்கு தி.மு.க. அரசு என்ன விளக்கம் அளித்தது என தெரியவில்லை. இதைப் பற்றி தெரியாமல் பதிலளிக்க முடியாது.

தமிழர்களின் பெருமையை கீழடி அகழ்வாராய்ச்சி மூலம் உலகிற்கு பறைசாற்றிது அ.தி.மு.க. அரசுதான். ஆனாலும் கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. அந்த விவகாரத்தில் தி.மு.க. அரசுக்கு துணை நிற்போம்.

இன்றைக்கு தமிழகத்தில் உள்ள 196 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி களில் 96 கல்லூரிகளில் முதல்வர்கள் இல்லை. முதல்வர்கள் இருந்தால் தான் கல்லூரி பேராசிரியர்கள் கட்டுப்பாடோடு இயங்குவார்கள். ஆனால் நிறைய கல்லூரிகளில் பேராசிரியர்களும் இல்லை. எப்படி தரமான கல்வி கிடைக்கும்.

ஒவ்வொரு கல்லூரிக்கும் தேவையான ஆட்கள் நியமிக்கப்படவில்லை. 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலின்போது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அரசு மற்றும் அரசு சார்ந்த காலி பணியிடங்கள் 5.50 லட்சம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் 50 ஆயிரம் பணியிடங்கள் தான் நிரப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். 3 மாதத்திற்கு முன்பு ஒரே நேரத்தில் 20 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெற்றுள்ளனர்.

ஆனால் இந்த அரசு அறிவித்த எதையும் செய்யவில்லை. காலி பணியிடங்கள் இருந்தால் எப்படி அரசு நிர்வாகம் சிறப்பாக செயல்படும். மருத்துவத் துறை, கல்லூரிகளில் காலி பணியிடங்கள் அதிக அளவில் உள்ளது. இப்படி தமிழகத்தில் எல்லா துறையும் பின்னடைவாக உள்ளது. இதற்கு காரணம் தி.மு.க. அரசு முறையாக செயல்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கீழடி அருங்காட்சியகத்தை எடப்பாடி பழனிச்சாமி சுற்றி பார்த்தபோது அங்கு கல்லூரி மாணவ-மாணவிகள் வந்திருந்தனர். அவர்களிடம் கல்வி குறித்து எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார். அப்போது மாணவிகள் லேப்டாப் கொடுப்பதை இந்த அரசு நிறுத்திவிட்டது. எங்களுக்கு ஆட்சி மாற்றம் வேண்டும். உங்கள் ஆட்சியில் லேப்டாப் கொடுக்கப்படும் என உறுதி அளித்தால் உங்களுக்கு வாக்களிப்போம் என கூறினார்.

அதற்கு எடப்பாடி பழனிச்சாமி லேப்டாப் கொடுத்தால் தான் வாக்களிப்போம் என கூறாதீர்கள். வாக்களிப்பது அனைவரின் கடமை. லேப்டாப் திட்டம் அம்மாவின் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. கண்டிப்பாக அ.தி.மு.க. ஆட்சி அமைந்த உடன் மாணவ-மாணவிகளுக்கு லேப்டாப் மற்றும் நிறுத்தப்பட்ட அனைத்து திட்டங்கள் கொண்டுவரப்படும் என கூறினார்.

You Might Also Like

திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளருக்கும் தேர்தல் ஆணைய அதிகாரிக்கும் வாக்குவாதம்

குஜராத்தில் உள்ளாட்சித் தேர்தலில் 9 மாநகராட்சிகளில் பாஜக வெற்றி

ஆம்ஆத்மியின் 7 எம்.பி.க்கள் இணைவது ஏற்பு – பாஜகவின் பலம் 113 ஆக உயர்வு

லடாக் புதிய 5 மாவட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பு

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை ஒத்தி வைக்க வலியுறுத்தல்

TAGGED:AIADMKGovernmentKeezhadiprojectsWe will supportஅதிமுகஅரசுஉறுதிகீழடிதிட்டங்கள்துணை நிற்போம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
இந்தியா

சர்வதேச விமானங்களுக்கான எரிபொருள் விலை உயர்வு… மத்திய அரசு அதிரடி

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?