By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    மியான்மரில் உள்நாட்டு போர்: ராணுவத்தின் கை மீண்டும் ஓங்குகிறது
    1 Min Read
    சிறுவனை கடத்திய வழக்கில் கனடாவில் இந்தியருக்கு சிறை தண்டனை
    1 Min Read
    ஆட்கள் நீக்கமா? இன்போசிஸ் தலைமை அதிகாரி கொடுத்த விளக்கம்
    1 Min Read
    ஹார்முஸ் நீரிணையை திறக்க என்ன செய்யலாம்… அதிபர் டிரம்ப்பின் அடுத்த திட்டம்
    1 Min Read
    ஈரானின் பொருளாதாரம் வீழ்ச்சியடைகிறது… அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    மகனை மார்பில் அணைத்தப்படியே இறந்து கிடந்த தாய்
    1 Min Read
    சத்தான ஹோம் மேட் செர்லாக் பவுடர் தயாரிப்பது எப்படி?
    1 Min Read
    லாரி மீது கார் மோதி விபத்தில் தெலுங்கானாவில் 6 பேர் உயிரிழப்பு
    1 Min Read
    சர்வதேச விமானங்களுக்கான எரிபொருள் விலை உயர்வு… மத்திய அரசு அதிரடி
    1 Min Read
    திருமண இசை கச்சேரியால் 140 கோழிகள் பலி… போலீசில் புகார்
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    நாளை மறுநாள் வாக்குகள் எண்ணப்படுகின்றன
    1 Min Read
    ஆரோக்கியம் அளிக்கும் வாழைப்பூ அடை தோசை செய்து அசத்துங்கள்
    1 Min Read
    அசத்தலான சுவையில் ஐஸ் டீ செய்வது எப்படி?
    1 Min Read
    தஞ்சாவூர் 12 மையங்களில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள்
    1 Min Read
    மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 90.18 லட்சம் பேர் பயணம்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: தூய்மைப்பணியாளர்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்கள்… அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > தூய்மைப்பணியாளர்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்கள்… அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
அரசியல் செய்திகள்

தூய்மைப்பணியாளர்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்கள்… அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

Nagaraj
Last updated: August 14, 2025 4:01 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு புதிய உயர்கல்வி உதவித் தொகை திட்டம், 30,000 புதிய குடியிருப்புகள் கட்டித்தருவது உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இத்தகவலை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கடந்த 13 நாட்களாக போரட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு பல சிறப்பு திட்டங்கள் குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளன.

அமைச்சர்வைக் கூட்டத்திற்குப்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “ தூய்மை பணியாளர்கள் மீது முதலமைச்சர் தனி கரிசனத்துடன் இருக்கிறார். பணியாளர்கள் நலனை காப்பதில் அரசு உறுதியாக உள்ளது. தூய்மை பணியாளர்களின் நல வாரியம் சிறப்பாக செயல்படுவதை அரசு உறுதி செய்துள்ளது.

தூய்மை பணியாளர்கள் குப்பைகளை கையாளும்போது தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதால் அதற்கு சிகிச்சை அளிக்க தனி திட்டம் செயல்படுத்தப்படும். பணியின் போது மரணமடையும் தூய்மை பணியாளர்களுக்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யப்படும்.

தூய்மை பணியாளர்கள் சுய தொழில் தொடங்கும் போது அவர்களுக்கு ரூ.3.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்; இதற்கான 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கான புதிய உயர் கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படும். நகர்புறங்களில் சொந்த வீடு இல்லாத தூய்மை பணியாளர்களுக்கு 30,000 புதிய குடியிருப்புகள் கட்டித் தரப்படும். கிராமப்புறங்களில் கலைஞர்கள் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீட்டில் தூய்மை பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

நீதிமன்ற உத்தரவால் தான் தூய்மை பணியாளர்கள் கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பலவந்தமாக வெளியேற்ற வேண்டும் என்கிற எண்ணம் அரசுக்கு இல்லை. பணி நிரந்தரம் குறித்த வழக்குகளில் முடிவுகளை பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற கோரிக்கைகள் குறித்து நீதிமன்றம், தொழிலாளர் தீர்ப்பாயம் வழக்கு முடிவுகளை பொறுத்து தீர்மானிக்கப்படும். அரசின் கதவுகள் பேச்சு வார்த்தைக்கு எப்போதும் திறந்திருக்கும்” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

You Might Also Like

பொய் தகவல்களை உடைத்தெறிவோம்” : இ.பி.எஸ். திட்டவட்டம்

மதுரை ஸ்ட்ராங் ரூமில் 15 நிமிடங்கள் வரை திடீரென செயலிழந்த சிசிடிவி

“தவெக 200 இடங்களில் வெற்றி பெறும்” : செங்கோட்டையன் உறுதி

சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெறுங்கள்… வீரபாண்டியன் அறிக்கை

சத்தியவான் சாவித்திரி படத்தின் 2வது லுக் போஸ்டர் வெளியீடு

TAGGED:arrestCourtorderPrioritySanitation Workersspecial projectsஉத்தரவுகைதுசிறப்பு திட்டங்கள்தூய்மைப்பணியாளர்கள்நீதிமன்றம்முன்னுரிமை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

நாளை மறுநாள் வாக்குகள் எண்ணப்படுகின்றன

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?