By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அது டாக்டர் வேடம்… சர்ச்சைக்கு பின் பூசி மெழுகிய டிரம்ப்
    1 Min Read
    331 குழந்தைகளுக்கு ஹெச்.ஐ.வி. தொற்று உறுதி: பாகிஸ்தானில் அதிர்ச்சி
    2 Min Read
    சுற்றுலா பயணிகளை அதிக அளவு ஈர்க்கும் ஒளிரும் கடல்!
    1 Min Read
    இந்திய பயணத்தை ஆவலுடன் மார்கோ ரூபியா எதிர்நோக்கியுள்ளாராம்
    1 Min Read
    டிரோன் தாக்குதல் நடத்தியதாக ஈரான் மீது குவைத் குற்றச்சாட்டால் பரபரப்பு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    வால்பாறை விபத்தில் இறந்தவர்களுக்கு குடியரசு தலைவர் இரங்கல்
    1 Min Read
    இந்திய எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்… ஈரான் தூதருக்கு நோட்டீஸ்
    1 Min Read
    பாடகி ஆஷா போஸ்லே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
    1 Min Read
    யமுனை நதியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 10 யாத்திரிகர்கள் பலி
    1 Min Read
    சிறப்பு தகுதிகளுடன் கூடிய 4 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு ஒப்புதல்
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    முடி குறைவாக இருக்கா… அப்போ இந்த ஹேர் பேக் உங்களுக்கு உதவும்
    2 Min Read
    குதிகால் வெடிப்பை சரி செய்ய உங்களுக்கு சிறந்த யோசனைகள்
    1 Min Read
    வெள்ளை முடி பிரச்னை தீர எளிய யோசனைகள் உங்களுக்காக!!!
    2 Min Read
    முகம் பளிச்சென்று பொலிவாக இருக்க வாழைப்பழத் தோல் உதவும்
    1 Min Read
    உடல் எடையை குறைக்க உதவுகிறது பேரீட்சை பழம்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: தஞ்சாவூர் அழகாக்கும் மேயர் சண்.ராமநாதன்: பொதுமக்கள் பாராட்டு மழை
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > தஞ்சாவூர் அழகாக்கும் மேயர் சண்.ராமநாதன்: பொதுமக்கள் பாராட்டு மழை
தமிழகம்

தஞ்சாவூர் அழகாக்கும் மேயர் சண்.ராமநாதன்: பொதுமக்கள் பாராட்டு மழை

Nagaraj
Last updated: December 10, 2025 8:01 pm
By Nagaraj 4 Min Read
Share
SHARE

தஞ்சாவூர்: தஞ்சாவூர், தமிழ்நாட்டின் கலை மற்றும் கலாச்சாரத் தலைநகரமாக விளங்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமாகும். இந்த நகரை மேலும் அழகாக்கி சுற்றுலாப்பயணிகளை கவர்ந்து இழுக்கும் வகையில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் மற்றும் நிர்வாகத்தினர்.

சோழப் பேரரசின் தலைநகராக இருந்ததால் இந்திய வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெறுகிறது. பிரகதீஸ்வரர் கோயில், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட ஒரு அற்புதமான கட்டிடக்கலைப் படைப்பாகும், இது சோழர்களின் கலைத்திறனையும், பக்தியையும் பறைசாற்றுகிறது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா நகராகவும் உள்ளது. தற்போது சுற்றுலாப்பயணிகளின் விருப்ப நகராகவும் மாற்றம் அடைந்து வருகிறது.

தஞ்சாவூர் காவிரி ஆற்றின் கரையில் அமைந்திருப்பதால், விவசாயத்திற்கும் பெயர் பெற்றது. இந்நகரம் “தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம்” என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இப்பகுதியில் விளையும் நெல் மற்றும் பிற பயிர்கள் மாநிலத்தின் உணவு உற்பத்திக்கு முக்கிய பங்காற்றுகின்றன. தஞ்சாவூரின் பாரம்பரிய உணவு வகைகள், குறிப்பாக அரிசி அடிப்படையிலான உணவுகள், இப்பகுதியின் விவசாய செழிப்பை பிரதிபலிக்கின்றன. மேலும், இந்நகரம் கைவினைப் பொருட்கள், குறிப்பாக பித்தளைப் பாத்திரங்கள் மற்றும் வெண்கலச் சிலைகளுக்கு புகழ்பெற்றது. இவை அனைத்தும் தஞ்சாவூரை ஒரு கலாச்சார, வரலாற்று மற்றும் பொருளாதார மையமாக உயர்த்துகின்றன.

இத்தகைய சிறப்பு மிக்க தஞ்சாவூரை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் மற்றும் நிர்வாகத்தினர் புதுப்பொலிவு பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில் ஒன்று சாலையின் மையப்பகுதியில் பூச்செடிகள், பல வண்ணங்களில் ஒளிரும் செயற்கை நீரூற்று அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதுதான்.

தஞ்சை நகராட்சியாக இருந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து தஞ்சை மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பழைய பஸ் நிலைய புனரமைப்பு, திருவையாறு பஸ் நிலையம் வணிக வளாகமாக மாற்றுதல், காமராஜர் மார்க்கெட் புனரமைப்பு, வணிக வளாகங்கள் கட்டுதல், சாலை சீரமைப்பு, எல்.இ.டி. விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தற்போது அடுத்த கட்டமாக தஞ்சை மாநகரில் உள்ள முக்கிய சாலைகளை, போக்குவரத்து நிறைந்த இடங்கள், சாலை மைய தடுப்பு வட்டங்கள் உள்ளிட்டவைகள் சீரமைத்து அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் சாலைகள் சந்திக்கும் இடத்தில் ரவுண்டானா அமைத்து அதில் வண்ண விளக்குகளுடன் கூடிய செயற்கை நீரூற்றும் அமைக்கப்படுகிறது.

தஞ்சை ராசாமிராசுதார் ஆஸ்பத்திரி சாலையின் மைய தடுப்பு, ராஜராஜசோழன் சிலை எதிர்புறம் இருக்கும் சாலை அழகுபடுத்தும் பணிகள், சிவகங்கை பூங்கா எதிரில் உள்ள 2 சாலை மைய வட்டங்கள் அழகுபடுத்தும் பணிகள், கொண்டிராஜபாளையம் சாலை மைய வட்டங்கள் அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேபோல் ராஜப்பா நகரில் உள்ள மைய சாலை தடுப்பு அழகுப்படுத்தும் பணிகள், ரோகிணி மருத்துவமனை பகுதியில் உள்ள மைய சாலை தடுப்பு அழகுபடுத்தும் பணிகள் ஆகிய பணிகள் நடந்துள்ளது. இந்த பணிகள் சாலை தடுப்பு மையபகுதியில் அழகு செடிகள், ரவுண்டானா சீரமைப்பு, விளக்கு வசதிகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் முனிசிபல் காலனி மைய சாலை தடுப்பு, வல்லம் குவாரி ரோடு மைய சாலை தடுப்பு அழகுப்படுத்தும் பணிகள், யாகப்பா நகர் மைய சாலை தடுப்பு அழகுபடுத்தும் பணிகள், அண்ணாசாலை ரோடு மைய சாலை தடுப்பு அழகுப்படுத்தும் பணிகள், கீழவாசல் கடைத்தெரு மைய சாலை தடுப்பு அழகுப்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

இந்த இடங்களில் பல்வேறு வகையில் அழகுப்படுத்தும் வகையில் வண்ணப் பூக்கள் பூக்கும் வகையிலான செடிகள் மற்றும் பல்வேறு வண்ணங்களில் ஒளிரும் மைண்ட் ஜெட் செயற்கை நீரூற்று அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் அழகுபடுத்தும் பணிகள் முடிவடையும் போது தஞ்சை மாநகராட்சி அனைத்து முதன்மை சாலைகளும், முக்கிய சந்திப்புகளும் மிகவும் பொலிவுபெற்று விளங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ராமநாதன் ரவுண்டானா, தமிழ்ப்பல்கலைக்கழகம் அருகில் பூங்கா, வல்லம் பிள்ளையார்பட்டி ரவுண்டானா, கொண்டிராஜபாளையம் ரவுண்டானா என பல்வேறு ரவுண்டானா பகுதிகளை அழகுமிளிர மாற்றங்களை செய்துள்ளது தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகம். இது தஞ்சைக்குள் வரும் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்து இழுத்து வருகிறது.

இதுகுறித்து மேயர் சண்.ராமநாதன் கூறுகையில், சுற்றுலா நகரங்களின் மிகவும் முக்கியத்துவம் பெற்றதாக தஞ்சாவூர் உள்ளது. பிற மாவட்ட, மாநிலங்களை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் தஞ்சாவூருக்கு வருகின்றனர். அழகு நிறைந்த இந்த நகரை மேலும் அழகாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு முழுமையாக பராமரிக்கப்படுகிறது. ரவுண்டானாக்களை பராமரித்து நீருற்றுகள் அமைத்து வர்ண விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதேபோல் சுற்றுலாப்பயணிகளுக்கு தேவையான அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் உள்ளதால் அதிகளவில் வருகை தருகின்றனர்.

குறிப்பாக தரமான சாலைகள், குடிநீர் என மாநகராட்சி நிர்வாகம் சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. இதற்கு தஞ்சாவூருக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்வதே கண்கூடான ஒன்றாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மாமன்னன் ராஜராஜ சோழன் சதயவிழாவின் போது பெரிய கோயில், மாநகராட்சி அலுவலகம், ஆற்றுப்பாலம் ரவுண்டானா, ராசா மிராசுதார் ஆஸ்பத்திரி சாலை உட்பட பல பகுதிகள் தகதகவென்று தங்கம் போன்று மின்னொளியில் மின்ன மாநகராட்சி சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. மாநகராட்சி மேற்கொள்ளும் இந்த வளர்ச்சிப்பணிகளுக்கு மக்கள் மத்தியில் பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது. மேயர் சண்.ராமநாதன் மற்றும் கவுன்சிலர்களுக்கு மக்கள் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் தெரிவித்து வருகின்றனர்.

You Might Also Like

முடி குறைவாக இருக்கா… அப்போ இந்த ஹேர் பேக் உங்களுக்கு உதவும்

குதிகால் வெடிப்பை சரி செய்ய உங்களுக்கு சிறந்த யோசனைகள்

வெள்ளை முடி பிரச்னை தீர எளிய யோசனைகள் உங்களுக்காக!!!

முகம் பளிச்சென்று பொலிவாக இருக்க வாழைப்பழத் தோல் உதவும்

உடல் எடையை குறைக்க உதவுகிறது பேரீட்சை பழம்

TAGGED:Beautification WorksMayor Shan. RamanathanQuarry RoadRoad BlockingYagappa Nagarஅழகுப்படுத்தும் பணிகள்குவாரி ரோடுசாலை தடுப்புமேயர் சண்.ராமநாதன்யாகப்பா நகர்வாழ்த்துக்கள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
விளையாட்டு

முதல் வெற்றியை பதிவு செய்தது கொல்கத்தா அணி

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?