சென்னை: இளமையாக இருக்க என்ன சாப்பிட வேண்டும்… பெண்களுக்கு எப்போதும் அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். பெண்கள் அழகாக மற்றும் இளமையாக இருக்க உண்ண வேண்டிய உணவுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பொதுவாக நாம் எல்லோருக்குமே இளமையான தோற்றத்துடனும், அழகான உடலமைப்புடனும் இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லாருக்கும் இருக்கும். அதற்கு உண்ண வேண்டிய உணவு முறைகளை குறித்து காணலாம்.
சிட்ரஸ் அமிலத்தை கொண்ட ஆரஞ்சு, எலுமிச்சைபழத்தில் வைட்டமின் ‘சி’ அதிகம் நிறைந்துள்ளதால், இந்தப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி விடவும் , சருமத்துக்கு புத்துணர்ச்சியை தந்து, முகத்தை அழகாக மாற்ற உதவி புரியும்.
ஆரஞ்சு, எலுமிச்சை பழமானது நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், இதில் லைகோபீன் என்னும் நுண் உட்டசத்து அதிகம் காணப்படுகிறது. இந்த பழத்தை சாப்பிடுவதால் வெயிலினால் பாதிப்படைந்த சருமச் செல்கள் அனைத்தும் புத்துணர்ச்சி பெற்று சருமம் அழகாக மாற உதவுகிறது.
தக்காளி பழத்தில் லைகோபீன் என்னும் சத்துகள் உள்ளதால், சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் முதுமைக் கோடுகளை தடுக்க உதவுவதால், இதனுடன் மஞ்சள் துளை சேர்த்து கலக்கி சருமத்திற்கு பூசி கொள்ளலாம் அல்லது அப்படியே சாப்பிட்டு வரலாம்.
கிவி, பீட்ருட், அவகோடா, பசலைக்கீரை, ஆப்பிள், ஆரஞ்சு, பீன்ஸ், பெர்ரி பழங்கள், மாதுளை போன்ற நல்ல ஆரோக்கியமான உணவுகளில், வைட்டமின் சி, ஏ, ஈ, லைகோபீன், லுட்டின் போன்ற ஆன்டி ஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளது. நிறைய பழங்களையும், காய்கறிகளையும் சாப்பிடுவதால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேறி, இளமையான தோற்றத்தில் நீட்டிப்பதுடன், உடல் நன்கு பொலிவு பெறும்.