தஞ்சாவூர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தஞ்சை மாநகரக் குழு சார்பில், தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இஸ்ரேல் – அமெரிக்க ஏகாதிபத்தியங்கள் ஈரானின் அப்பாவி பொதுமக்களையும், பள்ளிக் குழந்தைகளையும் கொன்று குவித்து வருவதை கண்டித்தும், ஒன்றிய அரசு சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தஞ்சை மாநகரக் குழு சார்பில், தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிபிஎம் மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி.செந்தில்குமார், சி.ஜெயபால், எஸ்.செல்வராஜ், மாதர் சங்கம் இ.வசந்தி, மாவட்டக்குழு உறுப்பினர் என்.குருசாமி, மாநகரக்குழு உறுப்பினர்கள் சி.ராஜன், வீ.கரிகாலன், போக்குவரத்து அரங்கம் திருநாவுக்கரசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.