விருத்தாச்சலம்: முதல்வர் ஸ்டாலின் 2-வது முறையாக முதல்வராக பதவி ஏற்பார் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
விருத்தாசலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் களத்தில் சிறப்பாக பணியாற்றியதாக கூட்டணிக் கட்சியினருக்கு நன்றி கூறினார். தொடர்ந்து, தமிழகத்தில் திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெறும் என அவர் குறிப்பிட்டார்.
வெற்றி பெற்று தொகுதி மக்களுக்கு சிறப்பாக பணியாற்றுவேன் என்றும் பிரேமலதா உறுதி அளித்தார்.