சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த மாதத்தில் மட்டும் 90.18 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர் என்று தகவல்கள் தெரிய வந்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த மாதத்தில் மட்டும் 90.18 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 45,18,247 பேர் பயணித்துள்ளனர்.
இது தொடர்பாக மெட்ரோ இரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 90,18,069 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக 02.04.2026 அன்று 3,65,807 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.