தஞ்சாவூர்: தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் தொடங்கப்பட்ட நடப்போம் நலம்பெறுவோம் என்கின்ற 8 கிலோ மீட்டர் தூரம் ஆரோக்கிய நடைபயிற்சி திட்டத்தினை மாதந்தோறும் முதல் ஞாயிறன்று தஞ்சை அன்னை சத்தியா விளையாட்டு திடல் நடை பயிற்சியாளர் சங்கத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி இன்று தஞ்சை அன்னை சத்தியா விளையாட்டு திடல் நடைபயிற்சியாளர் சங்கம் சார்பில் 21-வது மாதமாக 8 கி.மீ தூர ஆரோக்கிய நடைபயிற்சியை மேற்கொண்டனர்.
இந்த நடைப்பயிற்சியை தஞ்சாவூர் மாவட்ட விளை யாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் செந்தில்குமார் கொடியசைத்து தொடக்கி வைத்தார் . மருத்துவர் சந்திரசேகர், முன்னாள் துணை மேயர் மணிகண்டன், நடைபயிற்சியாளர்கள் சங்க கவுரவ தலைவர் செல்வம், தலைவர் சீனிவா சன், செயலாளர் ஜெய க்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கண்ணாடிகுமார்,முருகன், சுரேஷ் மற்றும் இளை ஞர்கள், மகளிர் உள்ளிட்ட ஏராளமானோர் உற்சா கத்துடன் பங்கேற்று புதியபேருந்து நிலையம் வரை சென்று, மீண்டும் அதே வழியாக அன்னை சத்யா விளையாட்டு திடலை வந்தடைந்தனர். இந்த நடைப்பயிற்சி அனை வருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக அமைந்தது.
நடைபயிற்சியில், பங்கேற்ற அனைவருக்கும் ஆரோக்கிய சிற்றுண்டியான முட்டை ,சுண்டல் வழங்கப்பட்டது. முடிவில் இளங்கோ நன்றி கூறினார்.