புதுடில்லி: கடும் விளைவுகளை சந்திப்பீர்கள்… இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டால் கடும் விளைவுகளை பாகிஸ்தான் சந்திக்கும் என உபேந்திர திவேதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தால், வரைபடத்தில் இருந்து பாகிஸ்தான் அகற்றப்படும் என இந்திய ராணுவ தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் உள்ள மனேக்ஷா மையத்தில் ‘யூனிஃபார்ம் அன்வெயில்ட்’ நடத்திய கலந்துரையாடலில், கடந்த ஆண்டு ‘ஆபரேஷன் சிந்துர்’ நடவடிக்கைக்கு வழிவகுத்த சூழ்நிலைகள் மீண்டும் ஏற்பட்டால் இந்திய ராணுவம் எவ்வாறு பதிலளிக்கும் என்று இந்திய ராணுவ தளபதி உபேந்திர திவேதியிடம் கேட்கப்பட்டது.
“பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டால், அது புவியியல் மற்றும் வரலாற்றின் ஒரு பகுதியிலிருந்து நீக்கப்படும்” என ராணுவ தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய ராணுவ தளபதி ஆற்றிய உரையானது, தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.