சென்னை: அமைச்சர் குற்றச்சாட்டு… தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி அமைப்பதை தடுக்க தி.மு.க.வும் – அ.தி.மு.க.வும் இணைந்து மக்கள் தீர்ப்புக்கு எதிரான ஒரு ஆட்சியை அமைக்க முயன்றதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா குற்றம் சாட்டியுள்ளார்.
தி.மு.க. தனது கொள்கையை மறந்து அ.தி.மு.க.வுக்கு ஆதரவளிக்க முயன்றதாகவும், இ.பி.எஸ். பின்வாசல் வழியாக முதலமைச்சராக திட்டமிட்டதாகவும் அவர் சாடினார். தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த தி.மு.க. – அ.தி.மு.க. முயன்றதாக ஆதவ் அர்ஜூனா குற்றம் சாட்டினார்.
அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கிலேயே த.வெ.க.வுக்கு சி.வி.சண்முகம் தரப்பு ஆதரவு அளித்ததே தவிர, அமைச்சர் பதவிக்காக அல்ல என்று ஆதவ் அர்ஜூனா விளக்கம் அளித்துள்ளார்.