திருமலை: 12 லட்சம் பக்தர்கள் முடி காணிக்கை… திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு மே மாதத்தில் மட்டும் 12 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.
திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கருப்பு தங்கம் என அழைக்கப்படும் தலைமுடி காணிக்கையும் அதிகரித்துள்ளது.
திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட தகவலின்படி, மே 27ஆம் தேதி வரை 12,43,063 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். இது கடந்த ஆண்டுகளை விட அதிகமாகும். கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாட்கள் காரணமாக பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக மே 23ஆம் தேதி மட்டும் 57,580 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.